உன்னா சம்பவத்தில் பாஜக MLA கைது செய்ததை அடுத்து தற்போது சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார்.
நாடுமுழுவதிலும் கத்துவா, உன்னா பகுதி பாலியல் வழக்கும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதே உன்னா பகுதியில் மற்றொரு பெண் அரசியல் தலைவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பள் பாலியல் வன்கொடுமை ஆளாக்கி கொலை செய்துள்ளனர். அதேப்போல் உபி-யின் உன்னா நகரில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை பாஜக MLA பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதிலும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை உத்திரபிரதேச மாநிலம் உன்னா பகுதியை சேர்ந்த 32 வயது பெண், தன்னை சமாஜ்வாதி கட்சி கவுன்சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது கடந்த மே, 2017-ல் நடந்ததாகவும் பின்னர் இது தொடர்பாக அக்டோபர் 2017-ல் ஷபிபூர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தனது அரசியல் பலத்தினை பயன்படுத்தி வெளியே வந்துவிட்டதாகவும், இந்த விவகாரத்தினை குறித்த வெளியே தெரிவித்தால் தன்னை வன்கொடுமைக்கு உட்படுத்திய வீடியோவினை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது பாஜக MLA குல்தீப் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்!