அதிமுக MP சத்தியபாமா வழக்கு, கணவருக்கு 15 நாள் காவல்!

திருப்பூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுக MP சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது கணவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Mar 30, 2018, 05:39 PM IST
அதிமுக MP சத்தியபாமா வழக்கு, கணவருக்கு 15 நாள் காவல்!  title=

திருப்பூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுக MP சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது கணவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார்!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கச்சேரிமேடு ஸ்ரீநகர் பகுதியில் சத்தியபாமா அவர்கள் அவரது மகன் சத்தியவசந்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது கணவர் வாசு அவரை கொலை செய்யும் முனைப்பில் அவரை சந்திக்க வந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சத்தியபாமாவுக்கும், அவரது கணவர் வாசுவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களது மகன் சத்தியவசந்திற்கு திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. சத்தியவசந்திற்கு இன்று கோயம்புத்தூரில் நிச்சயதார்த்தம் நடைபெறும் இருந்த நிலையில் நேற்றிரவு சத்தியபாமா வீட்டிற்கு அவரது கணவர் வாசு கத்தியுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தகாத வார்த்தைகளில் இவர்களை அவர் திட்டியதாகவும், ஒருகட்டத்தில் சத்தியபாமாவை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பகுதியல் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு காவல்நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வாசு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி முன் ஆஜர் படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் வாசு அடைக்கப்பட்டடுள்தாக தகவல் தெரிவிக்கின்றன.

Trending News