5வது ஊதியக்குழு: 12% டிஏ உயர்வு... இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி

5th Pay Commission: அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA),  அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2024, 05:28 PM IST
  • 5வது ஊதியக் குழுவின் கீழ் டிஏ உயர்வு.
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது?
  • எந்தெந்த மத்திய அரசு ஊழியர்கள் 5வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளனர்.
5வது ஊதியக்குழு: 12% டிஏ உயர்வு... இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி title=

5th Pay Commission: 5வது ஊதியக்குழுவின் கீழ் பழைய ஊதிய விகிதத்தின்படி இன்னும் ஊதியம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக செலவினத் துறை (DoE) ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

DA Hike: 12% அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த டிஏ (DA),  அடிப்படை ஊதியத்தில் 443% -இலிருந்து 455% ஆக உயர்ந்துள்ளது. அதாவது, அகவிலைப்படி 12% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க ஊழியர்களுக்கு உதவும். இது அரசாங்கத்தின் வழக்கமான ஊதிய திருத்தத்தின் ஒரு பகுதியாகும். 

Central Government Employees: எந்தெந்த மத்திய அரசு ஊழியர்கள் 5வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளனர்?

5வது ஊதியக் குழு ஏப்ரல் 1994 இல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1996 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும், அதன் பின்னர் நாட்டில் 6 மற்றும் 7 வது ஊதியக் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலுக்கு வந்தன. 6வது ஊதியக்குழு (6th Pay Commission) 2006ல் அமல்படுத்தப்பட்டு, அடுத்த கமிஷனான 7வது ஊதியக்குழு (7th Pay Commission) 2016 -இல் நடைமுறைக்கு வந்தது.

இரண்டு புதிய ஊதியக் கமிஷன்களின் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், 5வது ஊதியக் குழுவின்படி சம்பளம் பெறும் சில குறிப்பிட்ட அரசு ஊழியர்களும் இன்னும் உள்ளனர். சில மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் இன்னும் 5வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க | 18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?

5வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி திருத்தம் குறித்த DoE இன் சமீபத்திய உத்தரவு, அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்புகளில் இருந்து ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பொருந்தும் என்று குறிப்பிடுகிறது. இந்த விதிகள் அகவிலைப்படியின் கணக்கீடு மற்றும் சரிசெய்தல் முந்தைய விதிகளுக்கு இசைவாக இருப்பதை உறுதி செய்கின்றன. மத்திய அரசின் ஊதிய விகிதங்களைப் பின்பற்றும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட அகவிலைப்படி விகிதம் பொருந்தும். இந்தத் திருத்தம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த திருத்தம், பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், விலைவாசிக்கு ஈடாக சம்பளத்தை சீர்செய்வதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

DA Hike Under 7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு கடந்த மாதம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியை 3% உயர்த்தியது. இதையடுத்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக அதிகரித்துள்ளன. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில், ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.

மேலும் படிக்க | Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News