2019 ஆம் ஆண்டில் 92.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்தியா-சீனா இருதரப்பு வர்த்தகம் 2020 ஆம் ஆண்டில் 5.64% குறைந்து, 87.65 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா-சீனா வர்த்தகம் குறித்த மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, சீனாவிலிருந்து இந்திய இறக்குமதி மிகவும் குறைந்துள்ளது. 2019 இல் 74.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி, 10.87% குறைந்து, 66.78 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
" மறுபுறம் சீனாவுக்கான (China) இந்திய ஏற்றுமதி 17.896 பில்லியன் டாலரிலிருந்து 16.15% அதிகரித்து 2020 ஆம் ஆண்டில் 20.87 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்பது மேலும் ஒரு நல்ல செய்தியாகும். இது சீனாவிற்கான இந்திய ஏற்றுமதியின் மிக உயர்ந்த அளவாகும், முதல் முறையாக அவை 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளன" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது .
மறுபுறம், முதல் 15 இந்திய (India) ஏற்றுமதிகளில் (HS-2 மட்டத்தில்), 2020 ஆம் ஆண்டில் தாதுக்கள் (75.35%), இரும்பு மற்றும் எஃகு (336%), அலுமினியம் (2023%) மற்றும் தாமிரம் ஆகியவை அதிக அளவில் காணப்பட்டது. சீனாவுக்கு இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
ALSO READ | வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..!
அலுமினிய ஏற்றுமதி மற்றும் அலுமினியம் பொருட்கள் 2023.12% அதிகரித்து 640 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளன, மேலும் சீனாவுக்கு அலுமினியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.(இந்தியா 2019 இல் 21 வது இடத்தில் இருந்தது).
2019 ஆம் ஆண்டில் வேளாண் பொருட்களில், சர்க்கரை, அரிசி, எண்ணெய் போன்ற முக்கிய விவசாய பொருட்களில், மொத்த ஏற்றுமதி 2019 இல் 125.3 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 58.99% அதிகரித்துள்ளது. 2020 இல் இந்த அளவு1 99.14 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமாக கரும்பு சர்க்கரை (387.5%), சோயாபீன் எண்ணெய் (3050%), அரிசி (184%), மற்றும் காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் (415%) ஆகியவை அதிகரித்தன.
இருப்பினும், மாம்பழம் மற்றும் மீன் எண்ணெய் ஏற்றுமதி அதிக அளவில் குறைந்துவிட்டது, தேநீர் 6.94% குறைந்து, புதிய திராட்சை ஏற்றுமதி 24.1% வீழ்ச்சியடைந்தது.
ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR