தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் சமீபத்தில் திருத்தியது. வங்கிகளும் சில காலமாக வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. அதே சமயம், ரிசர்வ் வங்கி தொடர்ந்து மூன்று முறை ரெப்போ விகிதத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கே வங்கி FD விகிதங்கள் மற்றும் தபால் அலுவலக FD திட்டத்தின் வட்டி விகிதங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தபால் அலுவலக FD மீதான வட்டி விகிதங்கள்
அஞ்சலகம் FDக்கு அதிகபட்ச வட்டி 7.5 சதவீதம் வரை வழங்குகிறது. இருப்பினும், இந்த வட்டி FD காலத்தைப் பொறுத்தது. தற்போது, ஒரு வருட கால தபால் அலுவலக நேர வைப்புத் தொகைக்கு 6.9 சதவீதமும், 2 வருட கால அஞ்சல் அலுவலக நேர வைப்புத் தொகைக்கு 7.0 சதவீதமும், 3 வருட கால அஞ்சலக வைப்புத் தொகைக்கு 7 சதவீதமும், 5 வருட அஞ்சலக நேர வைப்புத்தொகைக்கு 7.5 சதவீதமும் வட்டி கிடைக்கிறது. . சிறு சேமிப்புத் திட்டங்கள் குடிமக்களை தொடர்ந்து சேமிக்கத் தூண்டுகின்றன. இந்த திட்டங்கள் மூன்று வகைகளாகும். சேமிப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
சிறு சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டி
சேமிப்பு கணக்கு - 4 சதவீதம்
1 ஆண்டு கால அஞ்சல் அலுவலக FD - 6.9 சதவீதம்
2 ஆண்டு கால அஞ்சல் அலுவலக FD - 7.0 சதவீதம்
3 ஆண்டு கால அஞ்சல் அலுவலக FD - 7 சதவீதம்
5 ஆண்டு கால அஞ்சல் அலுவலக FD: 7.5 சதவீதம்
5 ஆண்டு RD: 6.5 சதவீதம்
மேலும் படிக்க | Bal Aadhaar Card: குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
வங்கிகளின் எஃப்டியில் பெறப்படும் அதிகபட்ச வட்டி
பெரிய வங்கிகளில், HDFC வங்கி FDக்கு அதிகபட்சமாக 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ எஃப்டிக்கு ஆண்டுதோறும் 7.50 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. PNB ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. மேலும் ஐசிஐசிஐ வங்கி எஃப்டிக்கு ஆண்டுக்கு 7.60 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு 4 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரையிலான வட்டியை அரசு வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான FD மீதான வட்டி
அக்டோபர் மாதத்தில் மூத்த குடிமக்கள் FD வட்டி விகிதம் உயர்வு: வாழ்வாதாரத்திற்காக தங்கள் சேமிப்பையே பெரும்பாலும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், பல வங்கிகள் அக்டோபர் மாதத்தில் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான FD மீதான வட்டியை அதிகரித்துள்ளன. FD கணக்கில் மூலம் கிடைக்கும் வட்டி, உங்கள் முதலீட்டில் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. இது அதிக ரிஸ்க் எடுக்க முடியாத நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மிகவும் முக்கியமானது. FD கணக்குகள் வழக்கமான வருமானத்தை வழங்க முடியும் என்பதால், மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு சுமார் 9.45% வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ