ஜாக்பாட்! ஊழியர்களுக்கு அசத்தல் பரிசு: ஆகஸ்ட் 25க்குள் சம்பளம், போனஸ்..

பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு பெரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.  அதன்படி ஊழியர்களுக்கு அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட சம்பளம் வழங்கப்படும். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 16, 2023, 03:25 PM IST
  • ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
  • ஓணம் பண்டிகையன்று போனஸ்.
  • சிறப்பு விழா உதவித்தொகை வழங்கப்படும்
ஜாக்பாட்! ஊழியர்களுக்கு அசத்தல் பரிசு: ஆகஸ்ட் 25க்குள் சம்பளம், போனஸ்.. title=

7வது சம்பள கமிஷன், ஊழியர்களின் சம்பளம்: ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு நல்ல செய்தி ஒன்றி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு இப்போது முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும். இதற்கான உத்தரவை நிதி அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதனால் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமைக்குள் இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி
கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதன்படி தற்போது அவர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய நிதி அமைச்சகம் பிறப்பித்துள்ளது. மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2023 ஆகஸ்ட் மாதத்துக்கான ஓணம் பண்டிகையை முன்னிட்டு,கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பணிபுரியும் பாதுகாப்பு, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்த லுகையைப் பெறுவார்கள். இந்த இரு மாநிலங்களிலும் பணிபுரியும் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இந்த தேதிகளில் விநியோகிக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 25, 2023க்குள் இவை வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் ஜாக்பாட்.. உடனே இதை படியுங்கள்

இதனுடன் மகாராஷ்டிராவில் உள்ள மத்திய அரசு ஊழியர்குளுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை செப்டம்பர் 29 ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையையொட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மத்திய அரசு அலுவலகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தொழில்துறை ஊழியர்களின் சம்பளம் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வழங்கப்படலாம். இந்த ஓய்வூதியமானது ஊழியர் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு முன்பணமாக வழங்கப்படும் மற்றும் அனைத்து ஊழியர் ஓய்வூதியதாரர்களுக்கும் முழு மாதத்திற்கான சம்பள ஓய்வூதியத்தை நிர்ணயித்த பிறகு, ஆகஸ்ட்-செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து அதை சரிசெய்யலாம். இதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கையை எடுக்கவும், கேரள மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து வங்கிகளின் அனைத்து கட்டணக் கிளைகளுக்கும் இந்த அறிவுறுத்தலைத் தெரிவிக்கவும் கோரப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையன்று போனஸ்..
முன்னதாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் இருக்கும் அதே வேளையில் ஊழியர்களுக்கு போனஸாக 4000 ரூபாய் வழங்கப்படும். மேலும் 1000 ரூபாய் சிறப்பு விழாக் கொடுப்பனவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

சிறப்பு விழா உதவித்தொகை வழங்கப்படும்
போனஸ் பெற தகுதியில்லாத தொழிலாளர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2750 கிடைக்கும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு விழா உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும். பணியாளர்கள் பண்டிகை முன்பணமாக 20,000 ரூபாயும், தற்காலிக பணியாளர்கள் 6,000 ரூபாயும் முன்பணமாகப் பெறலாம்.

மேலும் படிக்க | இரவு நேர ரயில் பயண விதிகளில் மாற்றம்: இனி இந்த நேரத்தில் தூங்க முடியாது.. முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News