ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான செய்தி: நிதி அமைச்சகத்திடமிருந்து பறந்த உத்தரவு

Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்த அலுவலக குறிப்பில் வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 3, 2024, 03:20 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு நல்ல செய்தி.
  • ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு பெரிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது.
  • நிதி அமைச்சகம் அளித்துள்ள உத்தரவு என்ன?
ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான செய்தி: நிதி அமைச்சகத்திடமிருந்து பறந்த உத்தரவு title=

Central Government Pensioners: மத்திய அரசு ஊழியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.  ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு பெரிய நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது. மாத இறுதிக்குள் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பணத்தை வரவு வைக்குமாறு வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Finance Ministry: நிதி அமைச்சகம் அளித்துள்ள உத்தரவு என்ன?

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பாக நிதி அமைச்சகம் ஒரு OM, அதாவது அலுவலக குறிப்பை (Office Memorandum) வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்த அலுவலக குறிப்பில் வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Pension / Family Pension: அலுவலக குறிப்பு

"அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தில் உள்ள விதிகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய செயலாக்க மையங்கள் (CPPCs), மார்ச் மாதத்தைத் தவிர பிற மாதங்களில், மாதாந்திர ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தை ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவரின் கணக்கில் மாதத்தின் கடைசி நாளுக்குள் வரவு வைக்க வேண்டும். மார்ச் மாதத்தில், அடுத்த மாதத்தின், அதாவது ஏப்ரல் மாதத்தின் முதல் வேலை நாளில் வரவு வைக்கப்பட வேண்டும்” என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission | அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்த அதிரடி தகவல்!

ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்படுவது தீவிரமான விஷயமாக பார்க்கப்படும் என்றும், இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது உரிய  நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சகத்தின் OM -இல் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

"ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் வரவு தாமதமாவது மிகவும் தீவிரமாகப் பார்க்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவரின் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் வரவு வைக்கப்படுவதை உறுதிசெய்ய CPPC களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவிற்கு அப்பால் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் மிகவும் தீவிரமாகப் பார்க்கப்பட்டும். இதற்கு பொருத்தமானதாகக் கருதப்படும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த குறிப்பில் மேலும் கூறப்படுள்ளது. 

ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்ய, அனைத்து மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய செயலாக்க மையங்களும் (CPPCs) ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளின் முன்மதியம், மின்னணு முறையில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. 

மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான சுலபமான வழிகள்: இதோ முழு செயல்முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News