வந்தே பாரத் ரயிலில் இந்திய ரயில்வே புதுப்பிப்பு:: இந்திய ரயில்வே (Indian Railways) தற்போது நாடு முழுவதும் வந்தே பாரத் (Vande Bharat) ரயிலை இயக்கி வருகிறது. தற்போது வந்தே பாரத் ரயில் தொடர்பாக மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சற்று முன் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் இனி பயணிகள் வந்தே பாரத் ரயிலில் படுத்துக் கொண்டு (Vande bharat sleeper train) பயணிக்க முடியும். வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் பொருத்தப்பட்ட ரயில்களின் வணிகரீதியான உற்பத்தி ஜூன் 2025 முதல் டிதாகர் ரயில் சிஸ்டம்ஸ் (TRSL) லிமிடெட்டின் உத்தரபாரா ஆலையில் தொடங்கும்.
80 பெட்டிகள் தயாரிக்கப்படும்
செவ்வாய்க்கிழமை இந்தத் தகவலை அளித்து, மூத்த டிஆர்எஸ்எல் (TRSL) அதிகாரி ஒருவர் கூறியதாவது., பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல் உடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணிக்கு 80 பெட்டிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை உருவாக்கும் பணியை ரயில்வே ஒப்படைத்துள்ளது.
மேலும் படிக்க | பயணிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. இனி இந்த வசதியெல்லாம் கிடைக்கும்
வந்தே பாரதத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் ஸ்லீப்பர் ரயில்
வந்தே பாரதின் இந்த ஸ்லீப்பர் ரயில் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். இதில், அமரும் இருக்கைகளுக்கு பதிலாக, பயணிகள் தூங்குவதற்கு ஏற்ற இருக்கைகள் பொருத்தப்படும். இந்த ரயிலின் 50-55 சதவீத உதிரி பாகங்களை இந்த கூட்டணி வங்காளத்தில் மட்டுமே தயாரிக்கும் என்றார். இந்த கூட்டணியில் டிஆர்எஸ்எல் 52 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் துணைத் தலைவர் அளித்த தகவல் என்ன
ரயில்வேயில் இருந்து கூட்டணி பெற்றுள்ள இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.24,000 கோடி என்றும், இதில் டிஆர்எஸ்எல் பங்கு சுமார் ரூ.12,716 கோடி என்றும் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான உமேஷ் சவுத்ரி தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றார்.
இன்னும் 2 வருடத்தில் தயாராகிவிடும்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வணிகரீதியான உற்பத்தி ஜூன், 2025 முதல் தொடங்கும் என்றும், இதற்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகள் உத்தரபாரா ஆலையில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான உமேஷ் சவுத்ரி கூறியுள்ளார். இதற்காக ரூ.650 கோடியில் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் முன்மாதிரி இரண்டு ஆண்டுகளுக்குள் தயாராகிவிடும் என்றார். முதல் எட்டு ரயில்கள் உத்தரபாரா ஆலையில் முழுமையாக கட்டப்படும், மீதமுள்ள ரயில்கள் ரயில்வேயின் சென்னை ஆலையில் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயிலில் 53,653 பேர் பயணம்
தற்போது நாளுக்கு நாள் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில், மூன்று மாதங்களில், 53,653 பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் ரயில் செல்கிறது. வார நாட்களில் முன்பதிவு, 100 சதவீதத்தை விட அதிகரித்தே உள்ளது. பெட்டிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரித்தாலும், முன்பதிவு இருக்கும்' என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவு.. டிக்கெட் எடுக்க முடியவேயில்லை - திணறும் IRCTC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ