Indian Railways Intersting Facts: ஒவ்வொரு ரயிலின் கடைசிப் பெட்டியிலும் 'X' குறி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியானால் ஏன் வந்தே பாரத் ரயிலின் கடைசி பெட்டியில் 'X' குறி இருக்காது. இது ஏன் என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இதற்குப் பின்னால் உள்ள சிறப்புக் காரணத்தை இங்கு தெரிந்துகொள்வோம்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒவ்வொரு ரயிலின் கடைசிப் பெட்டியிலும் 'X' என்ற குறி வைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்தப் பெட்டிகள் ரயிலின் கடைசிப் பெட்டி என்பதை குறிப்பதற்காக என சொல்லப்படுகிறது. வந்தே பாரத் அதிவேக ரயில் என்பதால் வந்தே பாரத்தின் கடைசி பெட்டியில் இந்தக் குறி இல்லை, அது தனித்தனி பெட்டியாக இன்றி முழுமையாக ஒரே பெட்டியை போல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இரு திசைகளில் இருந்தும் இயக்க முடியும். அதனால்தான் அந்த ரயிலில் 'X' மார்க் இல்லை.
ஏன் 'X' குறி?
ரயில்வே பாதுகாப்பின் அடிப்படையில் பல வகையான சிக்னல்கள் அல்லது அடையாளங்களைப் பயன்படுத்துகிறது. அதேபோல், ரயிலின் கடைசி பெட்டியில் 'X' என்ற அடையாளம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது, இது பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கானது இல்லை. ரயிலின் பின்புறத்தில் வரையப்பட்டுள்ள 'X' என்றால் அது ரயிலின் கடைசிப் பெட்டி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த குறி ஏன் முக்கியமானது?
ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போதெல்லாம், ரயில்வே ஊழியர்கள் கடைசி பெட்டியில் செய்யப்பட்ட 'X' குறியைப் பார்க்கிறார்கள். அந்தக் குறியைப் பார்த்ததும், அது ரயிலின் கடைசிப் பெட்டி என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். 'X' குறி தெரியவில்லை என்றால், அந்த ரயிலின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் ரயிலில் இருந்து பிரிந்து எங்கோ பின்னால் விடப்பட்டுள்ளன என்று தெளிவாக அர்த்தம்.
இதற்குப் பிறகு, இந்த ரயிலின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட சில பெட்டிகள் ரயிலில் இருந்து பிரிந்து எங்கோ பின்னால் விடப்பட்டுள்ளன என்று அவர் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் FMKR கொடுப்பார். அதனால் தான் எந்த ரயிலின் கடைசி பெட்டியிலும் 'X' குறியை பார்க்க வேண்டும். இல்லையெனில் அது ஆபத்தாக முடியும்.
வந்தே பாரத்தின் சிறப்புகள்
வந்தே பாரத் ரயிலில் தானியங்கி ஸ்லைடு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு வாயிலுக்கு வெளியேயும் ஒரு தானியங்கி Foot Rest உள்ளது. இது நிலையம் வந்தவுடன் வெளியே வரும். வந்தே பாரத் ரயிலின் இருக்கைகள் பயணிகளின் வசதிக்காக சாய்ந்த வாக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஒவ்வொரு இருக்கையின் கீழும் சார்ஜிங் பாயிண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிலும் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளே 32 இன்ச் டிவி திரையும் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்கு முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில், ஃபயர் சென்சார், ஜிபிஎஸ், கேமரா ஆகிய வசதிகளையும் பெறுகின்றனர்.
தேவையற்ற ஆபத்தில் இருந்து பாதுகாக்க, வந்தே பாரத் ரயிலில் ரயில்வே 'சுரக்ஷா கவாச்' என்ற பாதுகாப்பு அம்சமும் நிறுவப்பட்டுள்ளது, இது மற்றொரு ரயிலில் மோதாமல் பாதுகாக்கிறது.
வந்தே பாரத் ரயில் எக்ஸ்பிரஸின் செயல்பாட்டு வேகம் மணிக்கு 160 கி.மீ. இதில் அதிதொழில்நுட்பம் வாய்ந்த பிரேக்கிங் அமைப்பு உள்ளது, இது ரயிலை டக்கென்று நிறுத்த உதவுகிறது. மாற்றுத்திறனாளி பயணிகளை முழுமையாக கவனித்து, இருக்கை கைப்பிடிகளில் இருக்கை எண்ணும் பிரெய்லி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான பயோ டாய்லெட்டுகளும் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை செய்யுங்கள்... ஏன் ரொம்ப அவசியம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ