கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: கடன் விதிகளில் ரிசர்வ் வங்கி செய்த மாற்றம்

RBI: வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, ​​கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் கடன் காலம் அல்லது EMI நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே நிதி நிறுவனங்கள் கூறுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 28, 2023, 04:30 PM IST
  • புதிய விதிகள் மற்றும் கடன் கொள்கை பற்றி ரிசர்வ் வங்கி என்ன கூறியது?
  • தற்போதைய விதிகள் என்ன சொல்கின்றன?
  • ரிசர்வ் வங்கி ஏன் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது?
கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: கடன் விதிகளில் ரிசர்வ் வங்கி செய்த மாற்றம்  title=

ரிசர்வ் வங்கி, சமீப்த்திய தகவல்: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் இஎம்ஐ அடிப்படையிலான தனிநபர் கடன்களுக்கான மிதக்கும் வட்டி விகிதத்தை (Floating Interest Rates) மீட்டமைக்க புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் NBFCகள் உட்பட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களும் (REs) கடன்களை அனுமதிக்கும் போது, ​​பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் கடன் பெறுபவர்களின் இஎம்ஐ (EMI), கடன் காலம் அல்லது இரண்டையும் பாதிக்கலாம் என்பதை அவர்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வங்கி கூறியது. வட்டி விகிதங்கள் காரணமாக இஎம்ஐ, கடன் காலம் அல்லது இரண்டிலும் மாற்றம் ஏற்பட்டால், கடன் வாங்கியவர்களுக்கு முறையான வழிகள் மூலம் உடனடியாகத் தெரிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய விதிகள் மற்றும் கடன் கொள்கை பற்றி ரிசர்வ் வங்கி என்ன கூறியது?

மிதவையிலிருந்து நிலையான விகிதத்திற்கு (Floating to Fixed Rates) மாறும்போது என்ன, எவ்வளவு வசூலிக்கப்படும் என்பதையும், கடன் காலத்தில் கடன் வாங்கியவர் எத்தனை முறை அவ்வாறு செய்யலாம் என்பதையும் நிதி நிறுவனங்கள் தங்கள் கொள்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வட்டி விகிதங்களை மறுசீரமைக்கும் போது வங்கிகள் தங்கள் வாரிய-அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்கு வட்டி விகிதங்களை மாற்றுவதற்கு கடன் வாங்குபவர்களுக்கு நிறுவனம் அதிகாரம் அளிக்கும்.

தற்போதைய விதிகள் என்ன சொல்கின்றன?

வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, ​​கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் கடன் காலம் அல்லது EMI நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே நிதி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் கடன் வாங்குபவர்களுக்கு தேர்ந்தெடுபதற்கான வழி இருப்பதில்லை. இருப்பினும் தற்போதுள்ள விதிகளின் படி வாடிக்கையாளர் தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனத்தை அணுகி கடன் ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்யலாம். 

ரிசர்வ் வங்கி ஏன் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது?

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகளாக, பல இக்கட்டான சூழல்களை நாம் இதில் பார்த்துள்ளோம். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு 50 வயதாகி இருக்கும். அவரது கடன் அடுத்த 15 ஆண்டுகளுக்கு நிலுவையில் இருக்கும். இதற்கிடையில் விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக கடன் காலம் மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், 80 வயதைத் தாண்டிய பிறகும், கடன் என்ற வாள் அவர் மீது தொங்கிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒருவர் பணம் ஈட்டும் வயது 60 அல்லது அதிகபட்சமாக 65 வயது வரை என கருதப்படுகின்றது. இந்த நிலையில், 80 வயதில் ஒருவர் எப்படி கடனை கட்டுவார்? இந்த சமீபத்திய அறிவுறுத்தலின் மூலம், இத்தகைய குறைபாடுகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்புகிறது.

மேலும் படிக்க | ரிலையன்ஸின் இயக்குநர்கள் குழுவில் பெரிய மாற்றம், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

புதிய விதிகளின் பயன் என்ன? 

வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் மிகவும் பலன் அளிக்கும். புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இது அந்தந்த நேரத்தில் இருக்கும் வட்டி விகிதங்களை பொறுத்தது. மேலும், ஃப்ளோட்டிங் விகிதத்திற்குப் பதிலாக நிலையான விகிதக் கடனைத் தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாகத் தெரியவில்லை. 

எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2021 இல் வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தபோது, வீட்டுக் கடன்களுக்கான ஃப்லோட்டிங் விகிதம் 6.5 சதவீதத்தில் தொடங்கியது. அந்த நேரத்தில் நிலையான விகிதம் 11-12 சதவீதமாக இருந்தது. எனவே, இந்த அறிவுறுத்தலை நன்மையான விகிதங்களில் லாக் செய்வதற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. மேலும், கடனை மூடுவது ஒரு கடினமான செயல் மற்றும் பல செலவுகளை உள்ளடக்கியது. எனவே, கடன் செலுத்தும் முறையை மாற்றுவதற்கான முடிவு நீண்ட மற்றும் கடினமான செயலாக இருக்கும்.

சிறந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்

நிலுவையில் உள்ள தொகை மற்றும் கடன் காலம் மிக நீண்டதாக இல்லாவிட்டால், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் அதிக EMI-களை ஒருவர் செலுத்தலாம். கடன் வாங்கும் நபருக்கு மாத வருமானத்தில் சிக்கல் இருந்தால், நீண்ட கால விருப்பத்திற்கு செல்வது நல்லது.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: வருகிறது டிஏ ஹைக்.. இந்த நாளில் வரும் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News