NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி நினைக்கும் போது பணம் எடுக்கலாம்!!

NPS: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி என்பிஎஸ் -இலிருந்து பணம் எடுப்பது இன்னும் எளிதாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 13, 2023, 05:00 PM IST
  • தற்போதைய விதிகளின்படி, என்பிஎஸ் சந்தாதாரர் 60 வயதை அடையும் போது, அவர் மொத்த ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் வரை திரும்பப் பெறலாம்.
  • மீதமுள்ள 40 சதவீதம் கார்பஸ் அடிப்படையில் ஒரு வருடாந்திர தொகையை (ஆன்யுட்டி) வாங்குவதற்கு செல்கிறது.
  • இந்த ஆண்டுத் தொகையிலிருந்து ஓய்வூதியம் பெறப்படுகிறது.
NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி நினைக்கும் போது பணம் எடுக்கலாம்!! title=

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி என்பிஎஸ் -இலிருந்து பணம் எடுப்பது இன்னும் எளிதாக இருக்கும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இப்போது சந்தாதாரர்களுக்கு முறையான பணம் எடுக்கும் வசதியை (வித்ட்ராயல்) வழங்க உள்ளது. மொத்த வைப்புத்தொகையில் 60 சதவீதத்தை ஒரே முறையில் எடுப்பதற்கான தேவையை இது நீக்கும். புதிய விதிகள் அமலுக்கு வந்தவுடன், சந்தாதாரர்கள் 75 வயது வரை தங்கள் பணத்தை அவ்வப்போது மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் எடுக்க முடியும்.

தற்போதைய விதிகளின்படி, என்பிஎஸ் சந்தாதாரர் 60 வயதை அடையும் போது, அவர் மொத்த ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் வரை திரும்பப் பெறலாம். மீதமுள்ள 40 சதவீதம் கார்பஸ் அடிப்படையில் ஒரு வருடாந்திர தொகையை (ஆன்யுட்டி) வாங்குவதற்கு செல்கிறது. இந்த ஆண்டுத் தொகையிலிருந்து ஓய்வூதியம் பெறப்படுகிறது. சந்தாதாரர் தனது முழுத் தொகையையும் 75 வயது வரை என்பிஎஸ் கணக்கில் வைத்திருக்கலாம். ஆண்டு அடிப்படையில் தனது மூலதனத்தில் 60 சதவீதத்தை படிப்படியாக திரும்பப் பெறும் வசதியையும் அவர் பெறுகிறார். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணம் எடுக்க இன்னும் அதிக விருப்பங்களைப் பெறுவீர்கள்

PFRDA தலைவர் தீபக் மொஹந்தி, 'ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு அமைப்பு, என்பிஎஸ் சந்தாதாரர்களை மொத்தமாக 60 சதவீத கார்பஸை திரும்பப் பெற அனுமதிக்காது. அதற்கு பதிலாக சந்தாதாரர்களுக்கு 75 வயது வரை அனுமதி அளிக்கப்படும். மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பணம் எடுக்கும் வசதி வழங்கப்பட உள்ளது.' என தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி! விதிகளை மாற்றிய மத்திய அரசு, இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது

முறையான மொத்தத்தொகை எடுக்கப்படும் (The Systematic Lumpsum Withdrawal - SLW) விருப்பம் சந்தாதாரருக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த வழியில், அவ்வப்போது, பகுதியளவு தொகையை எடுத்த பிறகு, சந்தாதாரர் டெபாசிட் செய்த தொகைக்கான ரிடர்னைப் பெறுவார்.

டயர்-I மற்றும் டயர்-II கணக்குகளுக்கு இந்த வசதி கிடைக்கும்

என்பிஎஸ் சந்தாதாரர்கள் ஓய்வு பெற்ற அடுத்த 15 ஆண்டுகளுக்கு முறையான மொத்ததொகை திரும்பப் பெறும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம் (systematic lumpsum withdrawal option) என்று மொஹந்தி கூறுகிறார். முறையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, என்பிஎஸ் சந்தாதாரர் 75 வயது வரை மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டுத் தொகைகளைப் பெறுவார். டயர்-I மற்றும் டயர்-II கணக்குகளுக்கு இந்த வசதி வழங்கப்படும். டயர் II கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் 60 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே மொத்த தொகை திரும்பப் பெறும் விருப்பம் தொடங்கப்படலாம்.

கூடுதல் தகவல்

சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனை வலியுறுத்தி பல போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையில் பல பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில், பல மாநில அரசுகளால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பல மாநிலங்களில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி, ஊழியர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர். ராஜஸ்தானின் அசோக் கெஹ்லாத் அரசுதான் முதன்முதலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுத்தது. இந்த நிலையில், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்த ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து கழகம் (ஆர்எஸ்ஆர்டிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க | Old Pension Scheme சூப்பர் அப்டேட்: முக்கிய கூட்டம்.... விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News