இன்றைய எல்பிஜி விலை நிலவரம்: ஜூலை மாதம் இன்று முதல் தொடங்கிவிட்டது. மாதத்தின் முதல் நாளான இன்று, எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக கேஸின் விலையை மாற்றியமைக்கிறது, அதன் பிறகு திருத்தப்பட்ட விலைகள் முதல் நாள் முதல் அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும். அந்த வகையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்தவகியில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், இம்முறை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், கடந்த மாதம் ATF இல் விமான நிறுவனங்கள் நிவாரணம் பெற்ற நிலையில், இன்று அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய LPG விலை என்ன
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாட்டில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் தற்போது டெல்லியில் ரூ.1,773க்கும், கொல்கத்தாவில் ரூ.1,857க்கும், மும்பையில் ரூ.1,725க்கும், சென்னையில் ரூ.1,945க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வீட்டு உபயோக சிலிண்டர் பற்றி பேசுகையில், தற்போது டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் ரூ.1,103, கொல்கத்தாவில் ரூ.1,129, மும்பையில் ரூ.1,102.50 மற்றும் சென்னையில் ரூ.1,118.50 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை முதல் ஊதியத்தில் பம்பர் ஏற்றம்... நாளை வரும் குட் நியூஸ்
ஏடிஎஃப் விலைகள் அதிகரித்தன
அதேசமயம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இன்று ஏடிஎஃப் விலையையும் உயர்த்தியுள்ளன. ATF இன் விலையில் ரூபாய் 1476. 88/KL அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் கட்டண திருத்தத்திற்கு பிறகு, ஏடிஎஃப் விலை டெல்லியில் ரூ.90,779.88 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99,793.45 ஆகவும், மும்பையில் ரூ.84,854.74 ஆகவும், சென்னையில் ரூ.94,530.51 ஆகவும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
தொடர்ந்து 406-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1937க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ