600 நாட்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்பு... BSNL-லின் அட்டகாசமான திட்டம் அறிமுகம்!

சுமார் 600 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.2,399 நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகப்படுத்தியது BSNL...!

Updated: May 27, 2020, 01:53 PM IST
600 நாட்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்பு... BSNL-லின் அட்டகாசமான திட்டம் அறிமுகம்!

சுமார் 600 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.2,399 நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகப்படுத்தியது BSNL...!

BSNL நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.2399 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் 600 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இந்த திட்டத்தின் காலம் முழுவதும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 600 நாட்களுக்கு தினசரி 100 SMS-களும் வழங்கப்படுகிறது. அதேபோல் 60 நாட்களுக்கு BSNL டியூன்ஸ்களும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா எதுவும் வழங்கப்படவில்லை. டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தனியாக வேறு திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

BSNL-லின் இந்த திட்டமானது அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது என்றாலும் FUP வரம்பின்படி தினசரி 250 நிமிடங்கள் என குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணையம் வழங்கப்படவில்லை என்பது சிறு குறையாகவே காணப்படுகிறது.

இது தவிர, BSNL-லின் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 500 GB 4G தரவு வழங்கும் 699 ப்ரீபெய்ட் திட்டம். இவை அனைத்தும் 180 நாட்களுக்கு வழங்கப்படும். BSNL வழங்கும் ரூ. 2,399 மற்றும் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டங்கள் இரண்டும் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும். மேலும், BSNL பயன்பாடு மற்றும் BSNL வலைத்தளம் வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.