தொழில் தொடங்கும் திட்டம் இருந்தால், நல்ல முதலீட்டு செய்வதன் மூலம் நீங்கள் நினைத்த தொழில்களை தொடங்கலாம். அதேநேரத்தில் சிறு தொழில்களுக்கும் பெரிய லாபம் தரும் ஆற்றல் உள்ளது. முதலீடு குறைவாகவும் வருமானம் அதிகமாகவும் இருக்கும் தொழில். அத்தகைய ஒரு தொழில் உள்ளது. அங்கு முதலீட்டுத் தொகை 25000 ரூபாய் மட்டுமே. ஆனால், மாதம் ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இந்தத் தொழிலை பெரிய அளவில் தொடங்க வேண்டும் என நினைத்தால், மத்திய அரசின் 50 சதவீத மானியமும் கிடைக்கும்.
முத்து வளர்ப்பு தொழில் மிகவும் சுவாரஸ்யமானது. நகர்ப்புறங்களில், பலருக்கு இது தெரியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது. குஜராத் பகுதிகளில் இதை பயிரிடுவதால் பல விவசாயிகள் லட்சபதிகளாகிவிட்டனர். அதே சமயம், ஒடிசா மற்றும் பெங்களூரிலும் நல்ல ஸ்கோப் உள்ளது. முத்து வளர்ப்பு விவசாயத்தில் வருமானம் அதிக அளவில் கிடைக்கும்.
மேலும் படிக்க: இந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் வீட்டிலிருந்தபடியே லட்சாதிபதி ஆகலாம்
முத்து வளர்ப்புக்கு தொழிலுக்கு என்ன தேவை?
முத்து சாகுபடிக்கு ஒரு குளம் தேவைப்படும். இதில் சிப்பிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. முத்து சாகுபடிக்கு மாநில அளவில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குளம் இல்லை என்றால் அதையும் ஏற்பாடு செய்யலாம். வீட்டில் உள்ள தொட்டியில், வாளிகளில் கூட முத்து உற்பத்தி செய்யலாம். உங்கள் முதலீட்டிற்கு அரசிடமிருந்து 50 சதவீதம் வரை மானியம் பெறலாம். தென்னிந்தியா மற்றும் பீகாரில் உள்ள தர்பங்கா சிப்பிகளின் தரம் மிகவும் நன்றாக உள்ளது.
முத்து வளர்ப்பு விவசாயத்தை எப்படி தொடங்குவது?
முத்து வளர்ப்பு விவசாயம் செய்ய, திறமையான விஞ்ஞானிகளிடம் பயிற்சி எடுக்க வேண்டும். பல நிறுவனங்களில் அரசாங்கமே இலவசமாக பயிற்சிகளை நடத்துகிறது. அரசு நிறுவனங்கள் அல்லது மீனவர்களிடமிருந்து சிப்பிகளை வாங்கி விவசாயத்தைத் தொடங்குங்கள். சிப்பிகள் இரண்டு நாட்களுக்கு குளத்தின் தண்ணீரில் வைக்கப்படுகின்றன. சூரிய ஒளி மற்றும் காற்று அதன் மீது வெளிப்பட்ட பிறகு, சிப்பியின் ஓடு மற்றும் தசைகள் தளர்வாகிவிடும். தசைகள் தளர்வாக இருக்கும்போது, துகளை பலவந்தமாக சிப்பிக்குள் உள்ளே வைக்கப்படுகிறது. துகள்கல் சிப்பியை குத்தும்போது, ஒரு திரவத்தைச் சுரந்து அந்த துகளை மூடும். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அந்த திரவம் தான் திடநிலை அடைந்து முத்தாக மாறுகிறது.
மேலும் படிக்க: ஆன்லைன் ஆப் மூலம் லோன் வாங்கியுள்ளீர்களா? ஆர்பிஐ எச்சரிக்கை!
முத்து வளர்ப்பு தொழிலில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?
ஒரு சிப்பி தயார் செய்ய சுமார் 25 முதல் 35 ரூபாய் வரை செலவாகும். அதே நேரத்தில், ஒரு சிப்பியிலிருந்து 2 முத்துக்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு முத்துவின் விலை சுமார் 120 ரூபாய். தரம் நன்றாக இருந்தால் 200 ரூபாய் வரையிலும் பெறலாம். ஒரு ஏக்கர் குளத்தில் 25 ஆயிரம் சிப்பிகள் போடலாம். இதில் உங்கள் முதலீடு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும். 50% சிப்பிகள் கூட சந்தைக்குக் கொண்டு வரப்பட்டால், ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க: வெறும் 25 ஆயிரம் முதலீடு செய்தால் 5 வருடங்களில் 72 லட்சங்களை சம்பாதிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR