இந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் வீட்டிலிருந்தபடியே லட்சாதிபதி ஆகலாம்

உங்களிடம் பழைய ரூ.5 நோட்டு இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் ரூ.30,000 எளிதாக சம்பாதிக்கலாம். ஆனால், இந்த ரூ.5 நோட்டில் சில சிறப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2022, 05:19 PM IST
  • பணம் ஈட்டுவது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாகும்.
  • சிலர் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள்.
  • வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட, உங்களிடம் சில பழைய நோட்டுகள் இருந்தால் போதும்.
இந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் வீட்டிலிருந்தபடியே லட்சாதிபதி ஆகலாம் title=

மிகவும் அரிதான ரூபாய் நோட்டுகள்: பணம் ஈட்டுவது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாகும். சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள், சிலரோ ஒன்றும் செய்யாமல், வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள்.

அப்படி வீட்டில் இருந்தபடியே பணம் பெற விரும்புபவர்களுக்கான செய்தி இது.  வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட, உங்களிடம் சில பழைய நோட்டுகள் இருந்தால் போதும். உங்களிடம் இந்த தனித்துவமான 5 ரூபாய் நோட்டு இருந்தால், வீட்டில் இருந்தபடியே பணக்காரர் ஆகலாம். பலர் அரிதான நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள். உங்களிடம் ஒரு அரிய ரூபாய் நோட்டு அல்லது நாணயம் இருந்தால், நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது.

ரூ.5 ரூபாய் நோட்டு மூலம் ரூ.30,000 சம்பாதிக்கலாம்

உங்களிடம் பழைய ரூ.5 நோட்டு இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் ரூ.30,000 எளிதாக சம்பாதிக்கலாம். ஆனால், இந்த ரூ.5 நோட்டில் சில சிறப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். இந்த ஐந்து ரூபாய் நோட்டில் டிராக்டரின் படம் இருக்க வேண்டும். மேலும், அதில் 786 என்ற எண் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | Jackpot! இந்த ‘2’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சக்கணக்கில் பணம் அள்ளலாம்..!!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டும் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த ரூபாய் நோட்டாக கருதப்படுகின்றது. உங்களிடம் இதே போன்ற ரூபாய் நோட்டு இருந்தால், அதை Coinbazzar இணையதளத்தில் விற்கலாம்.

1 ரூபாய் நோட்டின் மூலம் 45,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால் வீட்டில் அமைர்ந்தபடியே பணம் சம்பாதிக்கலாம். 1957ல் ஆர்பிஐ கவர்னர் எச்எம் படேல் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்கலாம். அதன் வரிசை எண் 123456 ஆகும். இந்த ரூபாய் நோட்டு ரூ.45,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நோட்டுகளை CoinBazaar இணையதளத்தில் விற்கலாம்.

10 ரூபாய் நோட்டின் மூலம் 25000 ரூபாய் சம்பாதிக்கலாம்

10 ரூபாய் நோட்டில் அசோகர் தூணின் உருவம் இருந்தால், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம். இந்த 10 ரூபாய் நோட்டுகள் 1943 இல் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வெளியிடப்பட்டன. மேலும் இவற்றில் சிடி தேஷ்முக் கையெழுத்திட்டுள்ளார். இந்த ரூபாய் நோட்டுக்கு மாற்றாக ரூ.20-25,000 வரை கிடைக்கும். 
அதாவது, மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான ரூபாய் நோட்டுகளும் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

இந்த ரூபாய் நோட்டுகளை வைத்து பணம் ஈட்டுவது எப்படி: 

- உங்களிடம் இப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதை விளம்பர தளமான Coinbazaar இல் ஆன்லைனில் விற்கலாம்.

- இந்த அரிய ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் இந்த இணையதளத்தில் பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர்.

- இந்த அரிய  ரூபாய் நோட்டை விற்க, முதலில் உங்களை Coinbazzar இல் விற்பனையாளராகப் பதிவு செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, ரூபாய் நோட்டின் படத்தைக் கிளிக் செய்து அதன் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.

- அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.

- இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் சரிபார்க்கவும்.

இந்த தளங்களில் நீங்கள் ஆன்லைனிலும் விற்கலாம்:

1. http://dir.indiamart.com/impact/old-coins.html
2. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
3. http:www.indiancurrencies.com

மேலும் படிக்க | ரூபாய் நோட்டில் தாகூர், அப்துல் கலாம் படங்கள்; RBI அளித்துள்ள விளக்கம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News