மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்!

மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. பி.மணிக் தாகூர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, அவர் இது தொடர்பாக மக்களவைவில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பியிருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்

Written by - ZEE Bureau | Last Updated : Jan 17, 2021, 06:46 PM IST
  • மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை
  • திருமங்கலத்தில் ஏற்றுமதி மையம் அமையும்
  • மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும்
மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்!

புதுடெல்லி: மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. பி.மணிக் தாகூர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, அவர் இது தொடர்பாக மக்களவைவில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பியிருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்

மதுரை மல்லிகையை (Madurai Jasmine) உலக அளவில் கொண்டு செல்வதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மதுரையில்  திருமங்கலம் பகுதியில் மல்லிகை மலர் பொருட்கள் ஏற்றுமதி மையம் (Jasmine Flower Export Center) அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்.

Also Read | வண்ணமிகு பூஜடை அலங்காரம் புகைப்படத் தொகுப்பு

மல்லிகை உற்பத்தியாகும் மாவட்டங்களில் ஏற்றுமதி (Export) மையங்கள் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கவிருக்கிறது. அதில் மல்லிகைக்கு பெயர் பெற்ற மதுரையை மத்திய அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது. மல்லிகைப்பூவை ஏற்றுமதி செய்வதற்காக மத்திய அரசோடு இணைந்து மாநில அரசும் கலந்தாலோசித்து திட்டங்கள் வகுக்கும்  என்றும் அந்த கடிதத்தில் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாக எம்.பி மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மதுரை மல்லி என்றாலே பருத்து, உருண்டு வெண்நிறத்தில் காணப்படும். மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் விளையும் மல்லிக்கான   புவிசார் குறியீடு, 2013-ஆம் ஆண்டு கிடைத்தது. இது, மதுரை (Madurai), தேனி, விருதுநகர், திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினரின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.   சந்தைகளில் மதுரை மல்லி எனச் சொல்லி விற்கப்படும் மல்லிகைப் பூக்கள் எல்லாமே, 'மதுரை மல்லி' இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வேறு வகை மல்லிகை மலர்கள் ஒரே நாளில் வாடிவிடும், ஆனால் மதுரை மல்லி, இரண்டு நாட்கள் வரை வாடாது, ஆனால் இது மதுரை மல்லி, வாடா  மல்லி அல்ல…  

Also Read | வருமான வரியில் 46,800 சேமிக்க வேண்டுமா? இதோ Tips   

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News