புதுடெல்லி: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா (Life Insurance Corp of India) காப்பீட்டு நிறுவனத்தில் 20% வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் கொள்கைத் திருத்தத்திற்கு இந்திய அமைச்சரவை இன்று (2022, பிப்ரவரி 26, சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது
சிறப்பு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் எல்ஐசியில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படாது, அதே நேரத்தில் மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 74% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
இந்த திருத்தம், அரசு நடத்தும் வங்கிகளுக்கான விதிக்கு இணையாக, எல்ஐசியில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 20% வரை உயர்த்துவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் என்று அரசாங்க வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | LIC IPO: இதில் முதலீடு செய்ய அனைவரும் காத்திருக்கும் காரணம் என்ன? விவரம் இதோ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு சந்தையின் வரும் ஏற்ற இறக்கம் காரணமாக எல்ஐசியின் பொதுப் பட்டியலை அரசாங்கம் ஒத்திவைக்கலாம் என்ற அச்சம் சில முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வந்த நிலையில் அமைச்சரவை முடிவு வந்துள்ளது.
காப்பீட்டு நிறுவனத்தின் பட்டியலை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். பட்ஜெட் செலவினங்களுக்காக நிதி திரட்டும் திட்டங்களுக்கு, எல்ஐசியின் பொதுப் பட்டியலை வெளியிடுவது முக்கியமானதாகும்.
ஐபிஓவில், எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத பங்குகளை ஒதுக்கும், 10% க்கு சலுகை அளவுக்கு மிகாமல் இருக்கும், அதே நேரத்தில் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி, சலுகைக்கு பிந்தைய ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 5% க்கும் அதிகமாக இருக்காது. ஐபிஓ தொடர்பாக 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் எல்ஐசி 114,498 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவின் காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட எல்ஐசி காப்பீட்டு நிறுவனம், 280 மில்லியனுக்கும் அதிகமான பாலிசிகள் மற்றும் காப்பீடு செய்துக் கொண்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை கொண்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம், தெற்காசிய நாட்டின் மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்களிப்பிற்காக (ஐபிஓ) அடுத்த மாதம் சுமார் 8 பில்லியன் டாலர்களை திரட்ட 5% பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின் மூலம், அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் எல்ஐசியின் 20% பங்குகளை வாங்க அனுமதிக்கும் என பெயர் வெளியிட விரும்பாதஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய விதிகளின்படி, சிறப்பு நாடாளுமன்றச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் எல்ஐசியில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படாது, அதே நேரத்தில் மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 74% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி
மேலும் படிக்க | LIC IPO: இதில் முதலீடு செய்ய அனைவரும் காத்திருக்கும் காரணம் என்ன?
மேலும் படிக்க | LIC IPO மிக விரைவில்? பங்கு விற்பனைக்கான ஆவணங்கள் தாக்கல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR