SBI ATM-ல் பணம் எடுக்கும் விதியில் மாற்றம்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாறிவிட்டன - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விதிகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2020, 03:11 PM IST
  • எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாறிவிட்டன
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஓடிபி பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ .10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை எடுக்கலாம்.
  • ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலத்தை எஸ்.டி.பி வங்கி 24x7 ஆக நீட்டித்துள்ளது.
SBI ATM-ல் பணம் எடுக்கும் விதியில் மாற்றம்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! title=

New Delhi: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏற்கனவே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகளில் ஓடிபி (OTP) அம்சத்தை கொண்டுவந்துள்ளது. செப்டம்பர் 18 முதல், எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுவதற்கான நேரத்தை நீட்டிப்பதாக வங்கி அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுக்கலாம், எந்தவித சிரமம் இல்லை. 

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஓடிபி (SBI OTP) விதிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ .10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் திரும்பப் பெறலாம். அதாவது இனிமேல் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.

எஸ்பிஐ (State Bank of India Rules) தனது விதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளதுக். தனது ட்விட்டர் பக்கத்தில், "வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யவும்" என வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

"எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலத்தை எஸ்.டி.பி வங்கி 24x7 ஆக நீட்டித்துள்ளது. எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யுங்கள்!" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.

 

ALSO READ |  குழந்தைகளுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்த SBI... இதோ முழு விவரம்!!

ஜனவரி மாதத்தில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்தது.

OTT எதற்கு?
முறைக்கேடான பரிவர்த்தனைகளை தடுக்கும் நோக்கில் பரிவர்த்தனையின் போது OTP அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க OTP  அடிப்படையிலான இந்த முறையை அறிமுகப்படுத்திய ஸ்டேட் வங்கி பணம் எடுக்கும் முறையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. 

மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து, SBI அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது. 

ALSO READ |  SBI வாடிக்கையாளர்களே... இந்த 5 தவறை செய்தால் உங்கள் பணம் கோவிந்தா தான்..!

ஏ‌டி‌எம்-மில் அட்டைதாரர் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் திரை OTP சாளரத்தைக் காண்பிக்கும். பரிவர்த்தனையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்கள் பணம் உங்களுக்கு கிடைக்கும்.

புதிய விதிகள்: 
வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 முதல் ஒரு சில விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. நீங்கள் அனுப்பும் பணத்திற்கு டி.சி.எஸ் (Tax Collected at Source) வசூலிக்கப்படும். ஒரு நிதியாண்டில் ஒரு வாடிக்கையாளர் ரூ .7 லட்சம் ரூபாய்க்கு மேல் அனுப்பினால் அதற்கு வரி பிடித்தம் செய்யப்படும். இந்த வீதி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பப்பட்டால், அந்த தொகை 7 லட்சத்திற்கும் குறைவாக இருந்தாலும் கூட அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கும் டி.சி.எஸ் பொருந்தும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News