ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோ முதல் ஏர்டெல் வரை மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது, இதில் நுகர்வோருக்கு அதிவேக தரவுகளுடன் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது.

Last Updated : Nov 29, 2020, 03:37 PM IST
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் title=

புது டெல்லி: இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இந்த அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் அதிவேக தரவு நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன. இருப்பினும், பல ரீசார்ஜ் திட்டங்கள் காரணமாக, பயனர்கள் தங்களுக்கு சரியான ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்ய முடியாது. ஆகையால், இன்று நாங்கள் மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மலிவு விலையில் சில ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம், இதன் விலை ரூ .300 க்கும் குறைவு.

ரூ .249க்கு ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 
ஜியோவின் (Reliance Jio) திட்டத்தில் நுகர்வோருக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும், பயனர்களுக்கு பிற நெட்வொர்க்குகளில் அழைப்பதற்கு 1,000 ஜியோ அல்லாத நிமிடங்கள் வழங்கப்படும், இருப்பினும் பயனர்கள் ஜியோ-டு-ஜியோ நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இது தவிர, நுகர்வோருக்கு ஜியோ ஆப்பின் சந்தா இலவசமாக வழங்கப்படும். அதே நேரத்தில், இந்த பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ALSO READ | மலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..!

ரூ .298க்கு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லின் (Airtel)இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் கால அவகாசத்துடன் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நுகர்வோர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் பெறுவார்கள். மேலும், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இருப்பினும், பயனர்கள் இந்த தொகுப்பில் பிரீமியம் பயன்பாட்டு சந்தாவைப் பெற மாட்டார்கள்.

ரூ .299க்கு வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம்
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நுகர்வோர் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவுடன் 100 SMS பெறுவார்கள். மேலும், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இது தவிர, பயனர்களுக்கு இந்த திட்டத்தில் VI (Vodafone Ideaமூவி மற்றும் லைவ் டிவிக்கான அணுகல் வழங்கப்படும். அதே நேரத்தில், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கால எல்லை 28 நாட்கள் ஆகும். 

ALSO READ | Prepaid Plans: குறைந்த கட்டண ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் இந்த நெட்வொர்க்ஸ்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News