வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. FD வட்டியை உயர்த்திய 2 பிரபல வங்கிகள்

Bank FD Interest Rates: தற்போது இரண்டு பிரபலமான தனியார் வங்கிகள் நிலையான வைப்பு மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2024, 12:01 PM IST
  • ரெப்போ விகிதம் குறித்த முடிவு எடுக்கப்படும்.
  • RBI ரெப்போ விகிதத்தைப் பொறுத்து FD வட்டி விகிதங்கள் மாறுபடும்.
  • ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. FD வட்டியை உயர்த்திய 2 பிரபல வங்கிகள் title=

வங்கிகள் நிலையான வைப்பு: நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிசர்வ் வங்கியானது நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தை (RBI Monetary Policy Committee Meet) தொடங்கியது. ரிசர்வ் வங்கி நடத்தும் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் முடிவு நாளை அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி முக்கிய முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் வெளியிடுவார். இதற்கு முன்னதாக, நாட்டின் மிகவும் பிரபலமான இரண்டு பெரிய தனியார் துறை வங்கிகள் நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தற்போது திருத்தியுள்ளது. இதனிடையே நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் போது, ​​ரெப்போ விகிதம் குறித்த முடிவு எடுக்கப்படும். மேலும் வங்கிகள் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் RBI ரெப்போ விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். அதனால்தான் நிலையான வைப்பில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த வட்டி விகிதங்களைக் கண்காணிக்க வேண்டும். விகிதங்கள் அதிகரிக்கும் போது, நீங்கள் உடனடியாக வாய்ப்பைப் பயன்படுத்தி அதில் முதலீடு செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹைக், டிஏ அரியர்.. இரண்டும் வருமா?

இந்த வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளது:
இந்நிலையில் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு தனியார் வங்கிகளான ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) சமீபத்தில் தனது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. அதன்படி எந்தெந்த கால அளவுகளுக்கு எவ்வளவு வட்டியை வழங்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

* இதில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.

* அதேசமயம் ஆக்சிஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றி உயர்த்தியுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்சட் டெபாசிட் விகிதங்கள்:
இந்நிலையில் தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை பொதுமக்களுக்கு 4.75 சதவீதம் முதல் 7.40 சதவீதம் வரையிலும், அதேசமயம் மூத்த குடிக்களுக்கு 5.25 சதவீதம் முதல் 7.90 சதவீதம் வரையிலும் வழங்குகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றங்கள் பிப்ரவரி 3, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

ஹெச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதம்:
7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் மொத்த வைப்புகளுக்கு 4.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மூத்த குடிக்களுக்கு 7 - 14 நாட்களில் முதிர்ச்சியடையும் மொத்த வைப்புகளுக்கு 5.25% வழங்குகிறது.
30 - 45 நாட்களில் முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு 5.50% வட்டி விகிதம் வழங்கியுள்ளது, மூத்த குடிமக்களுக்கு 6.00%.
46 - 60 நாட்கள் டெபாசிட் காலத்திற்கு 5.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு 6.25%.
61 - 89 நாட்கள் டெபாசிட் காலத்திற்கு 6.00% வட்டி விகிதத்தையும் நிர்ணயம் செய்துள்ளது, மூத்த குடிமக்களுக்கு 6.50%.
90 நாட்கள் <= 6 மாதங்கள் 6.50%, மூத்த குடிமக்களுக்கு 7.00%.
6 மாதங்கள் 1 நாள் <=9 மில்லியன்கள் 6.65%, மூத்த குடிமக்களுக்கு 7.15%.
9 மாதங்கள் 1 நாள் முதல் < 1 வருடம் 6.75%, மூத்த குடிமக்களுக்கு 7.25%. 
1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை 7.40%, மூத்த குடிமக்களுக்கு 7.90%.
15 மாதங்கள் முதல் < 18 மாதங்கள் வரை 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55%.
18 மாதங்கள் முதல் < 21 மாதங்கள் வரை 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55%.
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55%.
2 வருடம் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.00%, மூத்த குடிமக்களுக்கு 7.50%.
3 வருடம் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 7.00%, மூத்த குடிமக்களுக்கு 7.50%.
5 வருடம் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 7.00%, மூத்த குடிமக்களுக்கு 7.75%.

ஆக்சிஸ் வங்கி ஃபிக்சட் டெபாசிட் விகிதங்கள்:
இப்போது ஆக்சிஸ் வங்கி பற்றி வேசுகையில், இந்த வங்கி உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ ஃபிக்சட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதங்களையும் மாற்றியுள்ளது. அதன்படி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வங்கி 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. மறுபுறம் மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும்.

மேலும் படிக்க | அடி தூள்!! இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்... உயர்நீதிமன்ற உத்தரவு வந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News