Mutual Funds முதலீடு தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?

நீங்கள் பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்திருந்தாலும் சரி, செய்யப்போவதானாலும் சரி. நீங்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்திருப்பது நேரடியான முதலீடா அல்லது வழக்கமான பரஸ்பர நிதி முதலீடா என்பது தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 08:59 PM IST
  • பரஸ்பர நிதி தொடர்பான சில முக்கிய விஷயங்கள்
  • நேரடி பரஸ்பர நிதி என்றால் என்ன?
  • வழக்கமான பரஸ்பர நிதி என்றால் என்ன?
Mutual Funds முதலீடு தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா? title=

புதுடெல்லி: நீங்கள் பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்திருந்தாலும் சரி, செய்யப்போவதானாலும் சரி. நீங்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்திருப்பது நேரடியான முதலீடா அல்லது வழக்கமான பரஸ்பர நிதி முதலீடா என்பது தெரியுமா? 

ஒருவர் விநியோகஸ்தர் (distributor), தரகர் (broker) அல்லது வங்கி வழியாக முதலீடு செய்வது வழக்கமான பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்வது ஆகும், அங்கு விநியோகஸ்தர்களுக்கு கமிஷன் கிடைக்கும். வருமானம் குறைவாக இருக்கும்.

பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் SIP எனப்படும் systematic investment plan (முறையான முதலீட்டு திட்டம்) போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பு அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் பற்றிய சிறந்த அறிவு மற்றும் புரிதலுக்காக, டிஜிட்டல் நிதிச் சேவை தளமான Paytm இன் துணை நிறுவனமான Paytm Money, சில சரிபார்ப்புகளை பரிந்துரைக்கிறது.

Also Read | Kisan Vikas Patra: கணக்கு திறப்பு, முன்கூட்டியே மூடுவது, மாற்றுவது எப்படி?

வழக்கமான அல்லது நேரடி பரஸ்பர நிதி என்றால் என்ன?

ஒருவர் விநியோகஸ்தர் (distributor), தரகர் (broker) அல்லது வங்கி வழியாக முதலீடு செய்வது வழக்கமான பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது ஆகும், அங்கு விநியோகஸ்தர்களுக்கு கமிஷன் கிடைக்கும். வருமானம் குறைவாக இருக்கும். 

முதலீட்டாளர்கள் நேரடியாக பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். 

Also Read | மாதம் ₹900 சேமிப்பதன் மூலம் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் - எப்படி தெரியுமா?

ஒருவர் வழக்கமான அல்லது நேரடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தாரா என்பதை சரிபார்க்க வழிகளை Paytm Money  பரிந்துரைக்கிறது:

1. விநியோகஸ்தர்/தரகர்/வங்கி மூலம் பரஸ்பர நிதியில் முதலீடு (Investment) செய்திருந்தால் வழக்கமான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளீர்கள் என்பது பொருள்.

2. வழக்கமான பரஸ்பர நிதிகளில் மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கும் பல ஆன்லைன் தளங்கள் அல்லது செயலிகள் (website/app) உள்ளன. எனவே, ஒரு ஆன்லைன் ஊடகம் மூலம் முதலீடு செய்திருந்தால், அது வழக்கமான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளீர்கள் என்று பொருள்.  

3. ஏஎம்சி வலைத்தளம் / செயலியின் (AMC website/app) மூலம் முதலீடு செய்திருந்தால், நேரடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது என்று அர்த்தமல்ல. ஏஎம்சி வலைத்தளம் / செயலியின் மூலம் முதலீடு செய்யும்போது கூட நீங்கள் நேரடி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. நேரடி நிதிகள் திட்டம், தனது பெயரில் “நேரடி”(Direct) என்ற வார்த்தையைக் கொண்டுள்ளது.  நீங்கள் ஆன்லைன் தளம் மூலம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், இதை எளிதாக சரிபார்க்கலாம். நேரடி மியூச்சுவல் ஃபண்டுகளைக் குறிக்க சில இணையதளங்கள் “Dir” என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன.  

Also Read | Train டிக்கெட் விலை நாளை முதல் உயர்கிறதா? எவ்வளவு? 
 
5. எந்த சொற்களைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை அல்லது அதற்கு பதிலாக “Regular” அல்லது “Reg” போன்ற சொற்கள் இருந்தால், நீங்கள் வழக்கமான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள்.

6. முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் செலவு விகிதத்தை (expense ratio) சரிபார்த்து, நீங்கள் நேரடி விருப்பத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

7. உங்கள் CAS-இல், ஆலோசகர் என்று ஒரு தெரிவு இருக்கும். அது, “ARN” உடன் நிரப்பப்பட்டு, அதைத் தொடர்ந்து எண் குறியீடு இருந்தால், அது நிச்சயமாக ஒரு வழக்கமான மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். அதே ஆலோசகர் துறையில் நீங்கள் Direct / 0000000000 / INA100009859 போன்ற மதிப்புகளைக் கண்டால், அது ஒரு நேரடி பரஸ்பர நிதி என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

8. பெரும்பாலான AMC க்கள் நீங்கள் முதலீடு செய்த திட்டத்தை குறிப்பிட்டிருக்கும். மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் (e-mail/SMS) தகவல்தொடர்புகளில் “Direct” என்ற வார்த்தை இல்லாவிட்டால், நீங்கள் வழக்கமான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்றே கருதலாம் .

Also Read | தினமும் ₹.160 சேமிப்பதன் மூலம் மாதம் ₹.23 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்..

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News