முதலீட்டிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்!

Investment Tips: உங்கள் குழந்தை 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால்,  இன்றே அவரது பெயரில் அஞ்சல் அலுவலக MIS கணக்கைத் தொடங்கி சிறப்பான பலன்களை பெறவும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2022, 07:39 PM IST
  • அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்.
  • பாதுகாப்பான மற்றும் நிலையான லாபத்தைப் பெற விரும்புபவர்களுக்கு, அஞ்சலகத் திட்டம் மிகவும் சிறந்தது.
  • அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும்.
முதலீட்டிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்!  title=

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்:   பாதுகாப்பான மற்றும் நிலையான லாபத்தைப் பெற விரும்புபவர்களுக்கு, அஞ்சலகத் திட்டம் மிகவும் சிறந்தது. அஞ்சலக மாதாந்திர  வருமான திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும், உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தை பெரியவர்கள் மட்டுமல்லாது, 10 அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் திறக்கலாம் . உங்கள் குழந்தைகளின் பெயரில் இந்த, அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டம் என்னும் சிறப்புக் கணக்கை தொடங்கினால், அவருடைய பள்ளிக் கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கணக்கை திறக்கும் முறை

இந்த கணக்கை (Post Office Monthly Income Scheme Benefits) எந்த தபால் நிலையத்திலும் திறக்கலாம். இதன் கீழ் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போது, ​​இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி விகிதம்  6.6 சதவீதமாக உள்ளது. குழந்தையின் வயது 10 வயதுக்கு மேல் இருந்தால், அவருடைய பெயரில் இந்தக் கணக்கை திறக்கலாம். குழந்தையின் வயது 10 வயதுக்கு குறைவாக இருந்தால், அதற்குப் பதிலாக பெற்றோர் இந்தக் கணக்கைத் திறக்கலாம். சிறந்த வருமானத்தை கொடுக்கும் இந்த திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும்.

மேலும் படிக்க | பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க வேண்டுமா... ‘இவற்றை’ செய்தால் போதும்.!!

வருமான கணக்கீடு
உங்கள் குழந்தைக்கு 10 வயதாகி, நீங்கள் ரூ.2 லட்சத்தை அவர் பெயரில் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு கிடைக்கும் வட்டி தற்போதைய 6.6 சதவீதத்தில் ரூ.1100  என்ற அளவில் இருக்கும்.

ஐந்து ஆண்டுகளில், உங்களுக்கு கிடைக்கும் வட்டி மொத்தம் 66 ஆயிரம் ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் முதலீடு செய்த  2 லட்சம் ரூபாய் திரும்பக் கிடைக்கும்.
இதன் மூலம், உங்கள் குழந்தைக்கு 1100 ரூபாய் கிடைக்கும், அதை நீங்கள் அவரது கல்விக்கு பயன்படுத்தலாம். இந்த தொகை பெற்றோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இதேபோல், 4.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் 2500 ரூபாய் கிடைக்கும்.மேலும், இந்த கணக்கை வயது வந்த ஒருவர் அல்லது மூன்று நபர்கள் இணைந்து கூட்டாகவும் கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்தால், தற்போதைய விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1925 கிடைக்கும். 

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; மாதம் ₹50,000 ஓய்வூதியம் தரும் NPS திட்டம்!
 

Trending News