How To Transfer Amount From EPF to NPS: இந்தியாவில் பணி ஓய்வுக்கு பின்னான பென்ஷன் திட்டங்கள் என்று நாம் பார்த்தோமானால் பலருக்கும் ஞாபகம் வருவது என்றால் இரண்டு திட்டங்களை கூறலாம். இந்த இரண்டு திட்டங்கள்தான் பணியாளர்களுக்கு ஞாபகம் வரக்கூடிய முதன்மையான மற்றும் பெரும் பலன்களை அளிக்கக்கூடிய திட்டங்களாக இருக்கும். ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), மற்றொன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF).
இரண்டு திட்டங்களுக்கும் பெரிய தொகையை தரக்கூடியது. மேலும் பணி ஓய்வுக்கு பின் மாதாமாதம் பென்ஷனும் கிடைக்கும். ஆனால் இரண்டு திட்டங்களுக்கு உள்ள அடிப்படையான வித்தியாசம் என்னவென்றால், PPF என்பது வட்டி விகிதம் சார்ந்து நிதி உத்தரவாதம் அளிக்கும் திட்டம், NPS என்பது சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டம். அதாவது, NPS திட்டத்தில் ஒருவர் அவரின் முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
அதாவது, தங்களின் முதலீட்டின் மீதான வருமானம் எப்படி வர வேண்டும் என ஒருவர் நினைக்கிறாரோ அதற்கேற்ப முதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்யலாம். எனவே, நீண்ட கால பலனை எதிர்பார்க்கும்போது EPF திட்டத்தை விட NPS திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அதிக வருமானம் ஈட்டலாம் என்பது பலராலும் கூறப்படுகிறது. எனவே, சிலர் EPF முதலீட்டை NPS திட்டத்திற்கு மாற்ற முடியமா என சந்தேகம் எழுப்புவார்கள். ஆனால் இதனை தெரிந்துகொள்வதற்கு முன் EPF, NPS என்றால் என்ன என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
NPS திட்டம்
NPS திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கணக்கு வைத்துக்கொள்ளலாம். இதனை சேவை வழங்குநர்களின் நேரடி சந்திப்பிலோ அல்லது eNPS தளத்திலோ பான் மற்றும் வங்கி கணக்கு மூலம் திறந்துகொள்ளலாம். இதில் இரண்டு அடக்குகள் உள்ளன. Tier 1 அடுக்கில் 60 ஆண்டுகள் கால வரையறை உண்டு, Tier 2 அடுக்கில் எவ்வித கால வரையறையும் இல்லை. மேலும், Tier 1 கணக்கை ரூ.500 கொடுத்து திறக்கலாம், இதில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். Tier 2 கணக்கை ரூ.250 கொடுத்து திறக்கலாம், இதில் எவ்வித மினிமம் பேலன்ஸூம் கிடையாது.
EPF திட்டம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் EPF நடத்தப்படுகிறது. இது ஊழியர்களின் EPF பங்களிப்பில் ஆண்டுக்கு 8.25% கூட்டு வட்டியை அளிக்கும். ஊழியர்கள் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் அதிகபட்சம் 12 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும். ஊழியர்களின் பங்களிக்கும் அதே தொகையை முதலாளியும் பங்களிக்க வேண்டும். ஓராண்டில் 1.50 லட்சத்திற்குள் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரி இல்லை. அதேபோல், வட்டிக்கும், கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கும் வரி கிடையாது.
EPF டூ NPF - மாற்றுவது எப்படி?
அந்த வகையில் EPF தொகையை NPS திட்டத்திற்கு நீங்கள் மாற்றலாம். ஆனால், Tier 1 கணக்கை வைத்திருப்பவர்கள் மட்டுமே மாற்ற முடியும். இதற்கு ஒருவர் அவரின் முதலாளியிடம் இருந்து கணக்கை மாற்றுவதற்கான கோரிக்கையை சமர்பிக்க வேண்டும்.
முதலாளி அந்த கோரிக்கையை ஏற்று கணக்கை மாற்ற பதிவேற்றம் செய்யும் போது, PF/Superannuation நிதியிலிருந்து பரிமாற்றம் செய்வது குறித்து குறிப்பிட வேண்டும். ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியருக்கு Name of Point of Presence, Collection Account-NPS Trust – Subscriber Name – PRAN ஆகியவற்றை காசோலை/டிடியில் குறிப்பிட வேண்டும். இதுவே ஒரு அரசு ஊழியர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட PF/Superannuation நிதி, Nodal Office Name – Employer Name - PRAN ஆகியவற்றை காசோலை/டிடியில் குறிப்பிட வேண்டும். PRAN என்பது Permanent Retirement Account Number (நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்)
மேலும் படிக்க | ரயில் விபத்துக்கான காப்பீடு... 45 பைசாவிற்கு ரயில் பயணக் காப்பீடு... முழு விபரம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ