Kisan Upaj Nidhi: கேரண்டி இல்லாம கடன்! சூப்பர் ஆஃபர் தரும் அரசு! ஆண்டுக்கு 7% வட்டியில் கடன் வேண்டுமா?

Agricultural Loan From Centre : விவசாயிகளுக்கு 7% வட்டியில் எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் கிடைக்கும், இந்த வேலையைச் செய்தால் போதும்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 4, 2024, 10:33 PM IST
  • WDRA இன் கீழ் 5,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கிடங்குகள் உள்ளன
  • நாட்டில் மொத்த விவசாய கிடங்குகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சம் இருக்கலாம்
  • உத்தரவாதம் இல்லாமல் 7% வட்டி விகிதத்தில் கடன்
Kisan Upaj Nidhi: கேரண்டி இல்லாம கடன்! சூப்பர் ஆஃபர் தரும் அரசு! ஆண்டுக்கு 7% வட்டியில் கடன் வேண்டுமா? title=

e-Kisan Upaj Nidhi: விவசாயிகளுக்கு 7% வட்டியில் எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் கிடைக்கும். இது தொடர்பான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு கடன் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் தளத்தை  பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார்.

e-Kisan Upaj Nidhi

பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களுக்கு கடன் தருவதற்கு ஏதுவாக, உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல், டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தினார். இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் சமூகத்தின் வருவாயை அதிகரிக்கும், விவசாயத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

கிடங்கு உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு வைப்புத்தொகையை கிடங்கு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (WDRA) கிடங்கு மதிப்பில் 1% ஆகக் குறைக்கும் என்றும், அது கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
 
'இ-கிசான் உபஜ் நிதி'

டிஜிட்டல் நுழைவாயிலான 'இ-கிசான் உபஜ் நிதி' தளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர், WDRA பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள சரக்குகளின் அடிப்படையில் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறும் வசதியை வழங்குவதே நோக்கம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | IIFL Finance: நகைகள் மீது கடன் கொடுக்க தடை விதித்த ரிசர்வ் வங்கி! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

மின்னணு விற்பனை சேமிப்பு ரசீதுகளின் (e-NWRs) அடிப்படையில் விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. தற்போது WDRA இன் கீழ் 5,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கிடங்குகள் உள்ளன. மறுபுறம், மொத்த விவசாய கிடங்குகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரவாதமும் இல்லாமல் 7% வட்டி விகிதத்தில் கடன்
 
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவது என்பதே மத்திய அரசின் கொள்கை என அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் விவசாயிகள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் 7% வட்டி விகிதத்தில் எளிதாக கடன் பெறுவார்கள்.

'e-Kisan Upaj Nidhi' மற்றும் e-NAM மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) பெறுவதற்கு அல்லது அதை விற்பதன் மூலம் பயன்பெறும் தொழில்நுட்பம் சுலபமாகும்.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சந்தையின் தொழில்நுட்பத்தை அணுக முடியும் என்று மத்திய அமைச்சர் கோயல் வலியுறுத்தினார்.  கடந்த பத்தாண்டுகளில் எம்எஸ்பி மூலம் அரசு கொள்முதல் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் அமைச்சர் பியூஷ் கோயல் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க | FASTag KYC அப்டேட் செய்யும் எளிய வழிமுறை... முழு விபரம் இதோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News