சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த விதிகளை மறந்துடாதீங்க... பிறகு சிக்கல்தான்

Savings Account: சேமிப்பு கணக்கு குறித்த சில முக்கியமான விதிகளை மக்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்த விதிகள் பற்றிய போதுமான புரிதல் இல்லாமல் போனால், சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2024, 11:48 PM IST
  • ஒருவர் எத்தனை சேமிப்பு கணக்குகளை தன் பெயரில் வைத்திருக்க முடியும்?
  • சேமிப்பு கணக்கில் நாம் சேமிக்கும் பணத்திற்கு அதிகபட்ச வரம்பு உள்ளதா?
  • சேமிப்பு கணக்கில் எந்த அளவிற்கு மேல் தொகை இருந்தால் வரி விதிக்கப்படும்?
சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த விதிகளை மறந்துடாதீங்க... பிறகு சிக்கல்தான் title=

Savings Account: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவரிடமும் வங்கிக்கணக்கு உள்ளது. அவரவரது வருமானம், தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப பல்வேறு விதமான கணக்குகளை மக்கள் வங்கிகளில் தொடங்குகிறார்கள். எனினும் பெரும்பாலான மக்களிடம் ஒரு சேமிப்பு கணக்கு கண்டிப்பாக இருக்கும். தங்கள் செலவு போக மிச்சப்படுத்தப்படும் தொகையை மக்கள் சேமிப்பு கணக்கில் சேமித்து வைக்கிறார்கள். சேமிப்பு கணக்கு குறித்த சில முக்கியமான விதிகளை மக்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இந்த விதிகள் பற்றிய போதுமான புரிதல் இல்லாமல் போனால், சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். வருமான வரித்துறை மக்களின் சேமிப்பு கணக்குகளை கூர்ந்து கவனிக்கிறது. சேமிப்பு கணக்குகளில் வருமான வரி (Income Tax) தொடர்பான சில விதிகளும் உள்ளன. அந்த விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

பொதுவாக சேமிப்பு கணகுகள் குறித்து சில கேள்விகள் அவ்வப்போது கேட்கப்படுகின்றன:

- ஒருவர் எத்தனை சேமிப்பு கணக்குகளை தன் பெயரில் வைத்திருக்க முடியும்?

- சேமிப்பு கணக்கில் நாம் சேமிக்கும் பணத்திற்கு அதிகபட்ச வரம்பு உள்ளதா?

- சேமிப்பு கணக்கில் எந்த அளவிற்கு மேல் தொகை இருந்தால் வரி விதிக்கப்படும்?

இந்த கேள்விகளுக்கான விடைகளை வங்கி வாடிக்கையாளர்கள் (Bank Customers) தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். 

சேமிப்பு கணக்குக்கான வட்டி

சேமிப்பு கணக்குகளில் வங்கிகள் வருடாந்திர வட்டியை அளிக்கின்றன. இந்த வட்டி விகிதம் வங்கிக்கு வாங்கி வேறுபடும். பெரும்பாலான மக்களுக்கு சேமிப்பு கணக்குகளில் தாங்கள் எவ்வளவு டெபாசிட் செய்யலாம், எவ்வளவு எடுக்கலாம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றது. இதை பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருப்பதும் மிக அவசியமாகும். இதுமட்டுமின்றி சேமிப்பு கணக்குகள் தொடர்பான சில தவறான புரிதல்களும் வாடிக்கையாளர்களிடையே உள்ளன.

மேலும் படிக்க | 20 ஆயிரத்தை வைத்து பலே வருமானம் பார்க்கலாம்! லாபம் ஈட்டித்தரும் சூப்பர் வணிக ஐடியாக்கள்!

வங்கி கணக்குகளில் நாம் டெபாசிட் செய்யக்கூடிய தொகையின் வரம்பு எவ்வளவு

பொதுவாக ஒரு சேமிப்பு கணக்கில் வங்கி வாடிக்கையாளர் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம், எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் எடுக்கலாம். கணக்கில் டெபாசிட் செய்யவோ வித்டிரா செய்யவோ எந்த வரம்பும் விதிக்கப்படுவதில்லை. எனினும் வங்கி கிளைக்கு சென்று ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்யவும், எடுக்கவும் சில வரம்புகள் உள்ளன. ஆனால் காசோலை மூலமாகவோ, ஆன்லைனிலோ ஒரு ரூபாய் முதல் 100 ரூபாய், ஓராயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் என எவ்வளவு வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்து, அந்த கணக்கை பராமரிக்கலாம்.

Cash Transactions: வங்கிகளுக்கான விதிகள் என்ன

10 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகையை வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர் எடுத்தால் அதை வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு (Income Tax Department) தெரிவிக்க வேண்டும். அந்த நிதி ஆண்டிலேயே இந்த கணக்குகள் தொடர்பான தகவலை வங்கிகள் வழங்க வேண்டும் என்று வருமான வரி சட்டம் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளில் ஒரு நிதி ஆண்டில் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டெபாசிட்டுக்கு இந்த வரம்பு பார்க்கப்படுகிறது. எனினும் நடப்பு கணக்கு மற்றும் டைம் டெபாசிட்டுக்கு இது பொருந்தாது.

மேலும் படிக்க | எல்பிஜி முதல் சமூக வலைத்தளம் வரை... மார்ச் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News