Gold Rates Today: தங்கம் வாங்குவதில் தாமதம் வேண்டாம், இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ

சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.42 சதவீதம் குறைந்து 1,737.60 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 2.63 சதவீதம் குறைந்துள்ளது, இது 47.00 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2021, 11:10 AM IST
  • தங்கத்தின் விலை தேசிய அளவில் 1 கிராமுக்கு 1 ரூபாய் குறைந்தது.
    சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,490 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,800 ரூபாயாக உள்ளது.
Gold Rates Today: தங்கம் வாங்குவதில் தாமதம் வேண்டாம், இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ  title=

Gold / Silver Rate March 22, 2021: தங்கத்தின் விலை தேசிய அளவில் திங்களன்று 1 ரூபாய் குறைந்தது. முந்தைய அமர்வில் 4,393 ரூபாயாக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ .4,392 ஆனது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .43,920 ஆக உள்ளது. இது முந்தைய நாளின் விலையான ரூ .43,930 லிருந்து 10 ரூபாய் குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலையைப் போலவே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ .10 குறைந்து 10 கிராமுக்கு ரூ .44,920 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது 44,930 ரூபாயில் முடிவடைந்தது. வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் நிகழவில்லை. 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்: 

டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,390 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை (Gold Rate) இதை விட 4000 ரூபாய் அதிகமாக ரூ .48,390 ஆக உள்ளது.

சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,490 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

ALSO READ: Gold Rate Today: ₹11,000 குறைந்துள்ள தங்கம் விலை.. தங்கம் வாங்க சிறந்த வாய்ப்பு..!!

கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் 44,550 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 47,220 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 43,920 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 44,920 ரூபாயாகவும் உள்ளது. 

தங்கத்தின் சர்வதேச விலை:

சர்வதேச சந்தையில், தங்கத்தின் (Gold) வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.42 சதவீதம் குறைந்து 1,737.60 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 2.63 சதவீதம் குறைந்துள்ளது, இது 47.00 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

வெள்ளி விலை நிலவரம்:

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. திங்களன்று 10 கிராம் வெள்ளி 675 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 

மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு: 

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் (Silver) விலை 67,500 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 71,800 ரூபாயாக உள்ளது.

ALSO READ: Gold Rates Today: உயரத் தொடங்குகிறதா தங்கத்தின் விலை? இன்றைய நிலவரம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News