சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சாதனை விலை அளவை எட்டிய தங்கத்தின் விலை சுமார் 21 சதவீதம் சரிந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில், 22 காரட் தங்கம் மற்றும் 24 காரட் தங்கத்தில் விலை 10 கிராமுக்கு ரூ.140 என்ற அளவில் குறைந்துள்ளது, இந்திய சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 21) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது.
தங்கத்தின் ( Gold Price) விலை ஞாயிற்றுக்கிழமை ₹45,000 க்கும் குறைவாக இருந்தது, 10 கிராம் 22 காரட் தங்கம் 44,070 ரூபாயிலிருந்து 43,930 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,070 லிருந்து ரூ.44,930 ரூபாயாகவும் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு சாதனையை எட்டிய பின்னர் தங்கத்தில் விலை சுமார் 21 சதவீதம் சரிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், தங்கத்தின் விலை சுமார் 11,000 ரூபாய் என்ற அளவிற்கு சரிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் 10 கிராமுக்கு 57000 ரூபாய் என்ற அளவை தொட்டது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில், தங்கத்தின் விலை முறையே ரூ .44,400, ரூ .43, 930, ரூ .44,560 மற்றும் ரூ .42, 500 (22 காரட் தங்கத்தின் பத்து கிராம் விலை) என்ற அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டது. கலால் வரி, மாநில வரி மற்றும் பிற வரிகளால் இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சிறிது வேறுபடுகின்றன.
கடந்த ஆண்டு, கொரோனா (Corona Virus) நெருக்கடி காரணமாக, மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்திருந்தனர், ஆகஸ்ட் 2020 இல்,10 கிராம் தங்கத்தின் விலை மிக உயர்ந்த அளவாக ₹ 56,191 என்ற அளவை எட்டியது. அதனுடன் ஒப்பிடுகையில், தங்கம் 21 சதவீதம் வரை குறைந்துள்ளது, தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ₹43,930 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதாவது சுமார் 11,300 ரூபாய் குறைந்துள்ளது.
ALSO READ | 2000 ரூபாய் நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா.. மத்திய அரசு கூறியது என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR