ஹிண்டன்பர்க்கிற்கு செபி நோட்டீஸ் எதிரொலி! ஆர்டிஐ தாக்கல் செய்ய தயாராகும் ஹிண்டன்பர்க்!

Hindenburg reply to Sebi's notice : அதானி குழுமத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ஹிட்டன்பர்க் மீதான செபியின் நோட்டீசும் எதிர்வினையும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2024, 01:52 PM IST
  • செபியின் மூக்கை உடைக்கும் ஹிட்டன்பர்க்!
  • குறுகிய விற்பனையில் தனியார் கடன் வழங்குபவரின் பெயரை செபி குறிப்பிடவில்லை
  • செபியின் செயல்முறை விவரங்களுக்கு ஆர்டிஐ தாக்கல் செய்ய ஹிண்டன்பர்க் தயார்
ஹிண்டன்பர்க்கிற்கு செபி நோட்டீஸ் எதிரொலி! ஆர்டிஐ தாக்கல் செய்ய தயாராகும் ஹிண்டன்பர்க்! title=

அதானியின் சாம்ராஜ்யத்தை உலுக்கிய ஹிண்டன்பர்க் ரிசர்ச் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவின் சந்தைக் கட்டுப்பாட்டாளர் செபி ஹிண்டன்பர்க்கிற்கு 46 பக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதானி குழுமத்தின் மீது பங்கு மோசடி முதல் பணமோசடி வரை பல கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ஹிட்டன்பர்க் மீதான செபியின் நோட்டீஸ், தற்போது பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர் செபிக்கே பூமரங்காக வந்து தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.  

செபியின் நோட்டீசுக்கு எதிர்வினையாற்றும் ஹிண்டன்பர்க்

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் மீது இந்தியாவின் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி நோட்டீஸ் அனுப்பிய பிறகு அதற்கு கோபமாய் எதிர்வினையாற்றிய ஹிண்டன்பர்க், மோசடி செய்பவர்களை செபி பாதுகாப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஹிண்டன்பர்க், ஜூலை 1 ஆம் தேதி பதிவு செய்த தனது வலைப்பதிவு இடுகையில், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதே செபியின் பொறுப்பு, ஆனால் அது மோசடி செய்பவர்களைக் பாதுகாக்கிறது என தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக தனது தரப்பில் அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தை காப்பாற்றும் முயற்சிகளில் செபி ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ஹிண்டன்பர்க், செபியால் அனுப்பப்பட்ட காரணம் கேட்கும் ஷோ காஸ் நோட்டீஸை "முட்டாள்தனம்" மற்றும் "முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான உத்தி" என்றும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | கஜானாவை நிரப்பி சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்! ஜூன் மாதத்தில் சக்கைபோடு போட்ட வரி வசூல்!

அதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கியுடனான தொடர்பு

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஹிண்டன்பர்க் தனது வலைப்பதிவில், இந்திய வங்கியான கோடக் மகேந்திராவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.கோடக் வங்கி, அதானி குழுமத்திற்கு எதிராக பந்தயம் கட்ட அதன் முதலீட்டாளர் பங்குதாரரால் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் செபியின் செயல்முறை விவரங்களுக்கு ஆர்டிஐ தாக்கல் செய்ய ஹிண்டன்பர்க் தயார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் $4.1 மில்லியன் வருவாயை ஈட்டியதாக ஹிண்டன்பர்க் கூறுவதும், அதானியின் அமெரிக்கப் பத்திரங்களில் தனது குறுகிய கால முதலீடுகளில் (short selling) $31,000 சம்பாதித்தார். எனினும், முதலீட்டாளர் நிறுவனத்தின் பெயரை அவர் வெளியிடவில்லை. ஹிண்டன்பர்க்கின் இந்த வெளிப்பாடுகள் முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

அதானி குழுமம் மோசடியாக பங்கு பரிவர்த்தனைகளை செய்ததாகவும் மற்றும் பங்குகளின் விலையை மோசடியாக உயர்த்தியதாகவும் கெளதம் அதானியின் நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், இவை உண்மையானவை அல்ல என அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. அதானி குழுமம் தனது சொந்த பங்குகளை ரகசியமாக வாங்கி பங்குச் சந்தையில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை பொய்யாய திரித்துக் காட்டுவதாகவும் பங்கு சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாகவும் ஹிட்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் விலை அதலபாதளத்திற்கு சென்றதும், அதில் இருந்து மீண்டும் மீண்டு வர்த்தகத்தை பிடித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், செபியின் நோட்டீஸை பெற்ற ஹிட்டன்பர்க் ரிசர்ச், இணையதளத்தில் செபியின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

மேலும் படிக்க | திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டால் கவலையை விடுங்க: PF கணக்கில் ஈசியா எடுக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News