ஆதார் அட்டை பதிவிறக்க எளிதான செயல்முறை: “ஆதார் அட்டை” என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பல விதமான செயல்களுக்கு ஆதார் அவசியமாக ஆகி விட்டது. எனவே, ஆதார் அட்டை எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது தேவைப்படும்போது உங்களிடம் இல்லாமலோ இருந்தால், சிக்கல் ஏற்படலாம்.
ஆதார் அட்டை தொலைந்தால் உங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும், ஆனால் அதை மீண்டும் பெறுவது கடினம் அல்ல. வீட்டில் இருந்த படியே ஆதார் அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம் . ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான எளிய வழியை இன்று அறிந்து கொள்ளலாம், இதன் மூலம் சில நிமிடங்களில் உங்கள் தொலைபேசியில் ஆதார் அட்டையைப் பெற முடியும்.
ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி? (How to Download Aadhaar Card Online)
ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் ஆதார் அட்டையைப் பெறலாம். இந்த இணையதளம் மூலம் ஆதார் அட்டையை ஆஃப்லைனில் மாற்றும் வசதியும் உள்ளது.
மேலும் படிக்க | சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?
ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய படிப்படியாக செயல்முறை
1. ஆதார் அட்டையைப் பதிவிறக்க, UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
2. இங்கே உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
3. உள்நுழைந்த பிறகு, "Download Aadhaar" என்ற விருப்பம் உங்களது திரையில் தோன்றும்.
4. இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
5. இதை உள்ளிட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 4 இலக்க OTP வரும்.
6. OTP ஐ உள்ளிட்ட பிறகு, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
7. இதற்குப் பிறகு, உங்கள் e-Aadhaar அட்டையைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் கிடைக்கும்.
8. இந்த வழியில் நீங்கள் எளிதாக e-ஆதார் அட்டையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் தகவலுக்கு, UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தவிர, ஆதார் அட்டையை mAadhaar ஆப் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் மற்றும் உள்நுழைவதன் மூலம் இ-ஆதார் அட்டையைப் பெற முடியும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ