அறிந்துக்கொள்வோம்... வெறும் 10 நிமிடங்களில் e-PAN பெறுவது எப்படி?

வருமான வரித் துறை சமீபத்தில் e-PAN என்ற இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வெறும் பத்து நிமிடங்களில் PAN எண்ணை உருவாக்கிட முடியும்.

Last Updated : May 29, 2020, 09:16 PM IST
அறிந்துக்கொள்வோம்... வெறும் 10 நிமிடங்களில் e-PAN பெறுவது எப்படி?  title=

வருமான வரித் துறை சமீபத்தில் e-PAN என்ற இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வெறும் பத்து நிமிடங்களில் PAN எண்ணை உருவாக்கிட முடியும்.

அதாவது வீட்டில் இருந்தபடி, ஆன்லைனில் e-PAN எண்ணை எளிய முறையில் உருவாக்கிட பின் வரும் வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.

உங்களுக்கு PAN அட்டை தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம், ஆனால் அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். இந்த சூழலில் நீங்கள் PAN அட்டைக்கு விண்ணப்பிப்பீர்கள்?

கவலை வேண்டாம்... உங்களுக்காகவே வருமான வரித்துறை கொண்டு வந்தது தான் இந்த e-PAN திட்டம். இந்த திட்டம் தொடர்பான விதிகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகள் மூலம் நீங்கள் வெறும் 10 நிமிடங்களிலேயே உங்கள் PAN எண்ணை பெற்றுவிடலாம். 

அதாவது இணையத்தில் ஒரு சில கிளிக்குகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம். ஆனால் இந்த வசதியை பெற உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும். மேலும் இதன் செயல்முறை ,வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடத்தில் e-PAN உருவாக்குவது எப்படி?

  • e-PAN-ஐ உருவாக்க, முதலில் வருமான வரி வலைத்தளமான incometaxindiaefiling.gov.in-க்கு செல்லவும். 
  • இங்கு “Instant PAN through Aadhaar “-ஐ கிளிக் செய்யவும். 
  • இதற்குப் பிறகு உங்கள்  முன் ஒரு புதிய வின்டோ  திறக்கப்படும். அதில் நீங்கள் “Get New PAN” ஐக் கிளிக் செய்யவும். அதன் பின், இரண்டாவது திரை உங்கள் முன் திறக்கப்படும். 
  • இந்த திரையில் நீங்கள் உங்கள் ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • அதன் பிறகு, மேலும் தொடர்வதற்கு, “Captcha Code”-ஐ சரியாக நிரப்பவும். நிரப்பியதும் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எணுக்கு OTP எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும். 
  • அந்த OTP-ஐ தேவையான இடத்தில் நிரப்ப வேண்டும். அதன் பின் நீங்கள் உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும். பிறகு, வேறு சில தகவல்கள் கேட்கப்படும். அதில் நீங்கள் உங்கள் மின் அஞ்சல் முகவரியை நிரப்பித் தொடரவும். இந்த செயல்முறைகளுக்குப் பின் உங்கள் e-KYC தரவு e-Pan க்கு மாற்றப்படும். 

அடுத்த 10 நிமிடங்களில் இந்த செயல்முறை முற்றிலுமாக முடிவடையும், அதன் பின் நீங்கள் உங்கள் e-Pan  எண்ணை PDF வடிவத்தில் பெறுவீர்கள். அதை பதிவிறக்கம் செய்ய, நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைவராலும் இந்த  வசதியை பெற முடியுமா?

இதுவரை PAN கார்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். இந்த செயல்முறையை மேற்கொள்ள, நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் ஆதாருடன் இணைப்பது  மிகவும் முக்கியம். மேலும், உங்கள் பிறந்த தேதி முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வகையில் மத்திய அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை நீங்கள் பெற முடியும்.


மொழியாக்கம்: ஹேமலதா.எஸ்

Trending News