FD வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது ICICI வங்கி; புதிய வட்டி விகித விபரங்கள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு முன்பே, முக்கிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 8, 2022, 05:48 PM IST
  • ICICI வங்கியின் புதிய வட்டி விகிதங்களை அறிந்து கொள்ளலாம்.
  • ரெப்போ விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உயர்த்தியுள்ளது.
  • வங்கியின் இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
FD வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது ICICI வங்கி; புதிய வட்டி விகித விபரங்கள் title=

ரெப்போ விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உயர்த்தியுள்ள நிலையில், இதற்கு முன்பே, ஐசிஐசிஐ தனது FD வட்டி விகிதங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி ஜூன் 7 முதல் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை அமல்படுத்தியது. சமீபத்திய வட்டி விகிதங்களை அறிந்து கொள்வோம்.

வங்கி அளித்துள்ள தகவல் 

வங்கி அளித்த தகவலின்படி, ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையிலான எஃப்டிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ICICI வங்கி இப்போது 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிக வட்டி கிடைக்கும். வங்கியின் இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

ICICI வங்கியின் புதிய வட்டி விகிதங்களை அறிந்து கொள்ளலாம்:

பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான FDகளுக்கு 3.00 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 15 நாட்கள் முதல் 29 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FD களுக்கு ஆண்டுக்கு 3.00 சதவிகிதம் வட்டி பெறுவார்கள்.

மேலும் படிக்க | ரெப்போ விகிதத்தை 0.50% உயர்த்தியது RBI; EMI சுமை அதிகரிக்கும்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் மற்றும் 46 முதல் 60 நாட்கள் வரையிலான நிரந்தர வைப்புத்தொகைகளுக்கு வங்கி இப்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 3.25 சதவீத வட்டியை வழங்கும்.

61 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் FD களுக்கு, சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவரும் ஆண்டுக்கு 3.40 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

91 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு, சாதாரண வாடிக்கையாளர்கள்  மற்றும் மூத்த குடிமக்கள் இருவரும் 4.25 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ

121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரையிலான FDகளில், பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் வங்கி 4.25 சதவீத வட்டியை வழங்கும். 

151 முதல் 184 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 
 4.25 சதவீத வட்டி கிடைக்கும்.

151 முதல் 184 நாட்களில் முதிர்ச்சியடையும் FD களுக்கும் 4.25 சதவீத வட்டி கிடைக்கும்.

185 முதல் 210 நாட்கள் மற்றும் 211 முதல் 270 நாட்கள் வரை நிலையான வைப்புத்தொகைக்கு, - வங்கி சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்  4.50 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

271 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான எஃப்டிகளுக்கு, சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவரும் 4.70 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

1 வருடம் முதல் 389 நாட்களுக்கு செய்யப்படும் FDக்கு 4.95 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.

390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான FD களுக்கு, சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 4.95 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

5 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 1 5.00 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

அனைத்து வாடிக்கையாளர்களும் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு ஆண்டுக்கு 5% என்ற விகிதத்தில் வட்டி பெறுவார்கள்.

சாதாரண வாடிக்கையாளர்கள்  மற்றும் மூத்த குடிமக்கள் இரண்டு ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை மற்றும் 3 ஆண்டுகள் ஒரு நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.25 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News