ரேஷன் கார்டுதார்களுக்கு அதிர்ச்சி செய்தி.. அப்டேட்டை உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

5.87 லட்சம் AAY (மஞ்சள்) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், சுமார் 20000 நல நிறுவன உறுப்பினர்களுக்கும் கிட்டுகள் விநியோகிக்கப்படும். ஆகஸ்ட் 24 முதல் இலவச ஓணம் கிட் விநியோகம் செய்யப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 23, 2023, 04:46 PM IST
  • கேரளா ஓணம் கிட்டில் தாமதம் ஏற்படக்கூடும்.
  • மகாராஷ்டிராவிலும் ரேஷன் கிட் வழங்கப்படும்.
  • ரேஷன் கார்ட், சமீபத்திய புதுப்பிப்பு.
ரேஷன் கார்டுதார்களுக்கு அதிர்ச்சி செய்தி.. அப்டேட்டை உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

ரேஷன் கார்ட், சமீபத்திய புதுப்பிப்பு: கேரள அரசு தனது ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. இந்த முறை அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் ஓணம் கிட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கேரள அரசு ரேஷன் கிட் வழங்கியது. ஆனால், இந்த முறை அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த கிட் வழங்கப்படும், ஏனெனில் அரசின் மோசமான நிதி நிலை மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக இந்த பலன் அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஓணம் கிட்டில் தாமதம்:
இந்நிலையில் கேரளா அரசு ஓணம் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் கிட் வழங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது மக்களுக்கு ஓணம் கிட் வழங்கப்பட்டு வரும் நிலையில், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பொருட்கள் இன்னும் சப்ளை டெப்போக்களுக்கு வரவில்லை. குறிப்பாக துவரம் பருப்பு, பச்சைப்பயறு, நெய், பாயாசம் கலவை, தேயிலை தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை இன்னும் வரவில்லை. அதனால் ஓணம் கிட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த கிட் நேற்று (ஆகஸ்ட் 21) முதல் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், நெய், பாயசம் கலவை உள்ளிட்ட பொருட்களும், துணி பைகளும் வரவில்லை. அதனால் கிட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் செய்தி: இலவச எண்ணெய், சர்க்கரை.. வாரி வழங்கும் மாநில அரசு

ஓணம் கிட் 2023: பொருட்கள்/அளவுகளின் பட்டியல்: 
டீ பவுடர்: 100 கிராம்
துவரம் பருப்பு: 250 கிராம்
பாயாசம் மிக்ஸ் (மில்மா): 250 கிராம்
மில்மா நெய்: 50 மிலி
தேங்காய் எண்ணெய்: 500மிலி
சாம்பார் பொடி: 100 கிராம்
மிளகாய் தூள்: 100 கிராம்
மஞ்சள் தூள்: 100 கிராம்
பச்சை பயறு: 500 கிராம்
பட்டாணி: 250 கிராம்
உப்பு: 1 கிலோ
கொத்தமல்லி தூள்: 100 கிராம்
துணி பை: 1

ஓணம் பண்டிகையை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாநிலத்தில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும். இருப்பினும், ஆகஸ்ட் 29 முதல் 31 வரை மூன்று நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவிலும் ரேஷன் கிட்:
இதனிடையே மகாராஷ்டிரா அரசும் அதன் பயனாளிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், பிள்ளையார் சதுர்த்தி மற்றும் தீபாவளியன்று ஏழை மக்களுக்கு 100 ரூபாய்க்கு ரேஷன் கிட்கள் வழங்க உள்ளது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனந்த் ஷிகா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவங்கப்பட்டை மற்றும் எண்ணெய்யுடன் 1 கிலோ ரவை வழங்கப்படும். இதன் மூலம் 1.67 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ. 827 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

என்ன பொருட்கள் வழங்கப்படும்:
ஒரு கிலோ ரவை
கடலை பருப்பு
ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 
சர்க்கரை ஆகியவை வழங்கப்படும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: 23 முதல் மெகா ஜாக்பாட்.. உடனே படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News