Wearing Socks At Night, Lifestyle Tips: குளிர்காலத்தில் பலரும் தங்களின் உடல்நலனில் அதிகம் கவனம் செலுத்துவதை பார்க்க முடியும். காரணம் குளிர்காலத்தில்தான் பலருக்கும் காய்ச்சல், ஜலதோஷம், சளி, மூக்கடைப்பு போன்ற பல்வேறு உடல் பாதைகள் ஏற்படும். எனவே இதில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், குளிரில் இருந்து தங்களை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.
எப்படி தூங்கும்போது குளிரை தாங்குவதற்கு, உடலுக்கு முழுமையாக போர்வையை போர்த்தி தூங்குவோமோ அதை போல் சில பேர் காலுறைகளை (Socks) போட்டும் தூங்குவார்கள். இப்படி இரவில் காலுறைகளை போட்டு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, பிரச்சனைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
வெறுங்காலுடன் தூங்குவது எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. நீங்கள் இயல்பாக நல்ல தூக்கத்தை அனுபவிக்கலாம். அதே நேரத்தில் இரவில் காலுறைகளை அணிந்து தூங்குவது சிலருக்கு அசௌரியமாகவும் உணரலாம். இருப்பினும், இதன் நன்மைகள் மற்றும் பிரச்சனைகளை விரிவாக காண்பதே இதுகுறித்து முடிவெடுப்பதற்கு சரியானதாக இருக்கும்.
மேலும் படிக்க | மத்திய அரசு தரும் ரூ.82,000 ஸ்காலர்ஷிப் - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெறுவது எப்படி?
சாக்ஸ் போட்டு தூங்கும் பழக்கம்
பலர் பனிக்காலத்தில் காதுகளை பஞ்சை வைத்து மூடி கொள்வார்கள். இதன் மூலம் பனிக்காற்று காதுகள் வழியாக உடலுக்குள் செல்லாது என்பார்கள். அதேபோல் தான் கால் நகங்களுக்கு ஊடாக பனி சென்று உடல் அதிக குளிர்ச்சி அடையக் கூடாது என்பதற்காக காலுறைகளை இரவில் அணிந்துகொண்டு தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.
சாக்ஸ் அணிந்து தூங்குவதால் வரும் நன்மைகள்
நீங்கள் காலுறைகளை அணிந்து கொண்டு இரவில் தூங்கினால் ரத்த ஓட்டம் அதிகமாகும். அதாவது இது ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும், கால் அடிக்கடி உறையும் பிரச்சனை இருப்பவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். உங்களின் கால் பாதம் வெதுவெதுப்பாக இருந்தால்தான் மூளை உங்களின் உடலை தூங்குவதற்கு தயார்ப்படுத்தும். அப்போதுதான் உங்களுக்கு நன்றாக தூக்கமும் வரும்.
காலுறைகளின் ஆறுதல் அளிக்கும் பண்பு, உங்களுக்கு உறங்கும் சூழலை வசதியாக ஆக்குகிறது. காலுறைகளை அணிவது இரவு முழுவதும் உங்கள் கால்களை சூடாக அதாவது வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும், இது உங்களுக்கு ஓய்வெடுக்கவும் தூங்கவும் உதவும். கடுமையான குளிர் காலநிலையில், கம்பளி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட காலுறைகள் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சிறந்தவை ஆகும்.
மேலும் படிக்க | வீட்டு கடனில் இருக்கும் கூடுதல் கட்டணங்கள் தெரியுமா? பிரச்சனைகளை சமாளிக்க உதவும்
சாக்ஸ் அணிந்து தூங்குவதில் இருக்கும் பிரச்னைகள்
இறுக்கமான காலுறைகளை அணிவது தூக்கத்தையே கெடுத்துவிடும். நல்ல தூக்கம் கிடைக்காவிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமானதாகிவிடும். மேலும், மோசமாக தயாரிக்கப்பட்ட காலுறைகளும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மிகவும் இறுக்கமான அல்லது காற்றோட்டத்தை அளிக்காத பொருள்களால் தயாரிக்கப்பட்ட காலுறைகள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், இது உங்கள் கால் பாதத்தில் அதிக வியர்வையை உண்டாக்கலாம். இதனால், கால் பாதத்தில் அதிக எரிச்சல், அல்லது பூஞ்சை தொற்று போன்றவை கூட ஏற்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
எனவே, நீங்கள் இந்த விஷயத்தில் மருத்துவரை அணுகி உங்கள் உடல்நிலைக்கு காலுறைகளை அணிந்து தூங்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளுங்கள். மேலும், காலுறைகளை அணிந்து தூங்க வேண்டும் என்றால் மலிவான காலுறைகளை விடுத்து, கால்களுக்கு நல்ல சௌகரியமாக இருக்கும் காலுறைகளை அணிந்துகொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: வாசகர்களே, இவை அனைத்தும் பொதுவான தகவல்கள். இதனை பின்பற்றும் முன், மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ