ஓய்வுக்குப் பின் ஏற்படும் செலவுகள் குறித்து தற்போது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளனர். உண்மையில், வேலைக்குப் பிந்தைய செலவுகளை பராமரிப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. வயதான காலத்தில் வசதியான வாழ்க்கைக்கு, உங்கள் கணக்கில் ஒரு பெரிய தொகை மற்றும் ஒவ்வொரு மாதமும் வழக்கமான வருமானம் மிகவும் முக்கியம். இத்தகைய சூழ்நிலையில், முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமையை பாதுகாக்கும் பல சிறந்த திட்டங்கள் தற்போது உள்ளன. அத்தகைய ஒரு திட்டம் NPS அதாவது தேசிய ஓய்வூதிய அமைப்பு ஆகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது முதுமைக்கு ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யலாம்.
தற்போது இது மிகவும் பிரபலமான ஓய்வூதியத் திட்டமாகும், இதில் முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இந்த திட்டத்தில் என்ஆர்ஐகளும் முதலீடு செய்யலாம் என்பது சிறப்பு. இந்தத் திட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இங்கே முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ரயிலில் டிக்கெட் செக் செய்யக்கூடாது! இந்த விசேஷ விதிமுறை உங்களுக்கு தெரியுமா?
NPS திட்டத்தின் அம்சங்கள்
- 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் முதலீடு செய்யலாம்.
- இத்திட்டத்தின் கீழ் டியர் 1 மற்றும் டியர் 2 ஆகிய இரண்டு கணக்குகள் திறக்கப்படுகின்றன.
- டியர் 1 இல்லாமல் யாரும் டியர் 2 கணக்கைத் திறக்க முடியாது.
- இது அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சமூக பாதுகாப்பு முதலீட்டு திட்டமாகும்.
- இதில், முதலீட்டாளர் கடன் மற்றும் ஈக்விட்டி வெளிப்பாடு இரண்டையும் பெறுவார்கள்.
NPS எவ்வாறு கணக்கிடுவது?
கணக்கீட்டின்படி, 28 வயது முதல் 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால்,
மொத்தத் தொகை = 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்
இப்போது 10% வருமானத்துடன்,
மொத்த கார்பஸ் = 2.80 கோடி
இப்போது மொத்த தொகை = 1.6 கோடி
இப்போது நாம் ஆண்டுக்கு 8% வருடாந்திர வீதத்தை வைத்துக்கொண்டால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு
மொத்தத் தொகை (ஓய்வூதியம்) = மாதம் 75 ஆயிரம் ரூபாய்.
மேலும் படிக்க | இனி இதற்கெல்லாம் பான் அட்டை தேவையில்லை... பட்ஜெட்டில் வருகிறது அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ