Pension Hike: ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் அதிகரிப்பு! நல்ல செய்தி சொன்ன ஆந்திர மாநில அரசு

Old Pension Scheme: சமூக ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 14, 2022, 07:52 AM IST
  • 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஓய்வூதியத் திட்டம்
  • ஓய்வூதியத்தொகையில் 10% உயர்வு
  • புதிய ஓய்வுத்தொகை ஜனவரி முதல் அமலுக்கு வரும்
Pension Hike: ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் அதிகரிப்பு! நல்ல செய்தி சொன்ன ஆந்திர மாநில அரசு title=

Social Pension  Scheme: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சித் தரும் முடிவை எடுத்துள்ளது.  ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஓய்வூதியத் தொகையை 10 சதவீதம் உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. மாநிலத்தில் தற்போதுள்ள சமூக ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள்.

130.44 கோடி கூடுதல் சுமை 
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இந்த மாதம், இந்தப் பட்டியலில் மேலும் 2.43 லட்சம் பேர் இணைவார்கள். இந்த ஓய்வூதியதாரர்கள் அனைவரும் புத்தாண்டு அதாவது 2023 ஜனவரி தொடங்கியதும், அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 

இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த ஓய்வூதிய மாற்றத்தால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.130.44 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?

65 லட்சம் ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்று பலரும் அரசின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஓய்வூதிய தொகையில் 10 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதுள்ள சமூக ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுகள்
ஓய்வூதிய அதிகரிப்புத் தவிர, மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான 'பம்ப்டு ஸ்டோரேஜ்' மற்றும் நீர்மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஆந்திரப் பிரதேச பம்ப்டு ஸ்டோரேஜ் எலக்ட்ரிசிட்டி மேம்பாட்டுக் கொள்கை-2022 க்கும் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?

ஒருங்கிணைந்த எஃகு ஆலையை அமைப்பதற்கான JSW ஸ்டீல் லிமிடெட் மற்றும் மாநிலத்தில் மொத்தம் 1,600 மெகாவாட் பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ ஸ்டோரேஜ் திட்டங்களை அமைப்பதற்கான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ஆகியவற்றின் முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பல மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்து அறிக்கை அளித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்பிஎஸ் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.  

மேலும் படிக்க | சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு -உள்துறை அமைச்சர் அமித் ஷா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News