மொபைலில் இந்த ஆப் இருந்தால் உடனே டெலீட் பண்ணிடுங்க! IRCTC எச்சரிக்கை!

'irctcconnect.apk' என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கக்கோரி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2023, 02:07 PM IST
  • வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் போலி செய்திகள் பரவுகிறது.
  • 'ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட்' மொபைல் செயலியை டவுன்லோடு செய்யலாம்.
  • கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து செயலியை டவுன்லோடு செய்யலாம்.
மொபைலில் இந்த ஆப் இருந்தால் உடனே டெலீட் பண்ணிடுங்க! IRCTC எச்சரிக்கை! title=

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 'irctcconnect.apk' என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது.  வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான தளங்களில் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்க கோரி செய்திகள் அனுப்பப்படுகிறது.  இந்த apk உங்கள் மொபைலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது.  செயலியின் பின்னணியில் உள்ள மோசடி நபர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகள் போல நடித்து ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.  எனவே இந்த செயலியை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?

மோசடி செயலி குறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அன்புள்ள வாடிக்கையாளர்களே, ஃபிஷிங் இணையதளத்தில் ( https://irctc.creditmobile.site ) ஹோஸ்ட் செய்யப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் ஆண்ட்ராய்டு செயலி (irctcconnect.apk) வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சில மெசேஜிங் பிளாட்ஃபார்மில் பரவுகிறது. இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் (APK கோப்பு) மொபைல் சாதனத்தை பாதிக்கிறது.  மோசடி செய்பவர்கள் ஃபிஷிங் இணைப்பை அனுப்பி, இந்த ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோடு செய்யுமாறு பயனர்களை வற்புறுத்துகின்றனர்.  

டவுன்லோடு செய்த பின்னர் மோசடி செய்யும் நபர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகள் போல நடித்து பயனர்களது யுபிஐ தகவல்கள், கிரெடிட்/டெபிட் கார்டு தகவல் போன்ற முக்கியமான நெட் பேங்கிங் தகவல்களை கேட்டு பயனர்களை ஏமாற்றுகின்றனர்.  இதனைக் கருத்தில் கொண்டு, தயவுசெய்து இந்த செயலியை டவுன்லோடு செய்ய வேண்டாம் மற்றும் இதுபோன்ற மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.  ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட 'ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட்' மொபைல் செயலியை மட்டும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து எப்போதும் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் என்று எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | EPFO Alert: இதை செய்யாவிட்டால் உங்கள் இபிஎஃப் கணக்கு தானாக மூடப்படலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News