ஜான்சன் அண்ட் ஜான்சன் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறாக பணம் வசூலித்தால் ரூ .230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தேவையான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு உற்பத்தியாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி (GST) விலக்கின் பயனை வழங்காததற்காக தேசிய மிகை லாப தடுப்பு (The National Anti-profiteering Authority) அபராதம் விதித்துள்ளது.
தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் தலைவர் பி.என்.ஷர்மன் தனது உத்தரவில், 15 நவம்பர் 2017 முதல் டிசம்பர் 2018 வரை வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஜிஎஸ்டி (GST) விகிதத்தை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.
மேலும் மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் 230 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அபராதத்தை நிறுவனம் செலுத்தாவிட்டால், இந்த பணம் ஜிஎஸ்டி அதிகாரத்தால் மீட்கப்படும் எனவும், ஜி.எஸ்.டி சட்டம் 171(3A) பிரிவின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தங்கள் குழந்தை தோல் புற்றுநோயை ஏற்படுத்துவதாக நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த பெண்ணின் கூற்று உண்மை என்று கண்டறியப்பட்டு மற்றும் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது. இதேபோல், கடந்த ஆண்டு நிறுவனம் தயாரித்த ஒரு பொருளின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.