அபிஜீத் பானர்ஜியின் அறிக்கை குறித்து கபில் சிபல் ஆலோசனை!

நோபல் பரிசு பெற்ற அபிஜீத் பானர்ஜியின் அறிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு கபில் சிபல் ஆலோசனை அளித்துள்ளார்.

Last Updated : Oct 16, 2019, 10:40 AM IST
அபிஜீத் பானர்ஜியின் அறிக்கை குறித்து கபில் சிபல் ஆலோசனை! title=

நோபல் பரிசு பெற்ற அபிஜீத் பானர்ஜியின் அறிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு கபில் சிபல் ஆலோசனை அளித்துள்ளார்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு பட்டியலிடப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர் அபிஜீத் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார், இது இந்தியாவில் ஆளும் கட்சிக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. 

அபிஜீத் பானர்ஜி அறிக்கையைப் பயன்படுத்தி எதிர்கட்சியினர் அரசாங்கத்தைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியை குறிவைத்து காங்கிரஸ், "மோடி புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் கொள்ள வேண்டும்" என விமர்சித்தது. மேலும் நீதித் திட்டம் குறித்து பொருளாதார நிபுணர் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்ட காங்கிரஸ், ஒரு நாள் அது உண்மையாகிவிடும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற அபிஜீத் பானர்ஜி, இந்திய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளதாக திங்களன்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிக்கை காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அபிஜீத் பானர்ஜி, இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக செயல்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன். அரசாங்க முயற்சிகளில் தவறு ஏதும் உள்ளது என்பதை நிச்சையம் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் பொருளாதார பின்தங்கிய நிலை மிக வேகமாக நகர்ந்து வருகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அபிஜித் பானர்ஜியின் கருத்தினை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவிக்கையில்., "நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவு வேகமாக பின் நோக்கி செல்கிறது? என்பது எங்களுக்குத் தெரியாது, தரவு பற்றி சர்ச்சைகள் உள்ளன, ஆனால் அது வேகமாக பின்நோக்கி செல்கிறது என்பது உன்மை என நான் நினைக்கிறேன்". என தெரிவித்தார். மேலும்., பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த புகைப்படங்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டு நாட்டின் மீது கவனம் செலுத்தினால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News