சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றியுள்ள முக்கிய விதிகள்..!!!

சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வாகனம் மற்றும் டாக்ஸி சேவைகளுக்கான பல விதிகளை மாற்றியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 30, 2020, 08:08 PM IST
  • சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வாகனம் மற்றும் டாக்ஸி சேவைகளுக்கான பல விதிகளை மாற்றியுள்ளது.
  • புதிய விதிமுறைகளில் செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை வழங்குபவர்கள் அடிப்படை வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்க முடியும்
சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றியுள்ள முக்கிய விதிகள்..!!! title=

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாலை போக்குவரத்தில் விதிகளில் சில மாற்றங்கள் மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றம் வாகன உரிமையாளர்களும் வண்டியில் பயணிப்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள் ஆகும்.

ஓலா (Ola) , உபெர் போன்ற செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை வழங்குபவர்களுக்கு சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை  Motor Vehicle Aggregator Guidelines 2020 என்பதன் கீழ் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின் கீழ், எந்த டாக்ஸி ஓட்டுநரும் இப்போது தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து இஷ்டப்படி கட்டணத்தை வசூலிக்க முடியாது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Transport)  புதிய வழிகாட்டுதல்களில் ஓலா, உபெரின் கட்டணம் பீக் டைம் அதாவது நெரிசல் நிறைந்த நேரங்களில் கூட அடிப்படை கட்டணத்தில் ஒன்றரை மடங்குக்கு மேல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஓலா, உபெர் போன்ற டாக்ஸி சேவை வழங்குபவர்கள் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இப்போது ஓட்டுநருக்கு 80 சதவீத கட்டணம் கிடைக்கும். இதற்குப் பிறகு, இணைய சேவை வழங்கும் அக்ரிகேட்டருக்கு 20 சதவீதத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்க முடியாது. இதில் அடிப்படை கட்டணம் 3 கிலோமீட்டருக்கான கட்டணமாக இருக்கும்.

புதிய விதிமுறைகளில் செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை வழங்குபவர்கள் அடிப்படை வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. டிரைவர் பயணத்தை ரத்து செய்தால், 10 சதவீத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

போக்குவரத்து அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 இல் ஒரு திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. புதிய விதியின் கீழ், ஒரு வாகனத்தின் உரிமையாளர் பதிவு சான்றிதழில் ஒருவரை (Nominee)  நாமினேட் செய்யலாம். வாகனம் பதிவு செய்யும் நேரத்தில் நாமினேஷன் வசதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், இது வாகனத்தை அதன் நாமினிக்கு மாற்ற உதவும்.

விண்டேஜ் வாகனங்களை பதிவு செய்தல் - விண்டேஜ் மோட்டார் வாகனங்கள் தொடர்பான மத்திய மோட்டார் வாகன விதிகள் (Central Motor Vehicle Rules -CMVR)  1989 இன் கீழ் அமைச்சகம் பரிந்துரைகளை கோரியுள்ளது. விண்டேஜ் கார்களை பதிவு செய்வது குறித்து எந்த விதியும் இல்லை என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே முறையான பதிவு செயல்முறை தொடங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Good News: தில்லியில் COVID-19 RT-PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது..!!!

 

Trending News