வந்தே பாரத்திற்கு இணையான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... அசத்தலான அம்சங்கள்!

ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முற்றிலும் புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு புஷ்-புல் தொழில் நுட்பத்தினால் ஆன ரயிலாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2023, 07:27 PM IST
வந்தே பாரத்திற்கு இணையான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... அசத்தலான அம்சங்கள்! title=

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 அன்று முதல் இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முற்றிலும் புதிய ரயிலாகும். . அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு புஷ்-புல் தொழில் நுட்பத்தினால் ஆன ரயிலாகும், இது தோற்றம் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் அரை-அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இருந்து உத்வேகம் பெறுகிறது. அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் பொது முன்பதிவு இல்லாத பயணிகளுக்கானது. 

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உட்புற வடிவமைப்பு

அம்ரித் பாரத் விரைவு வண்டியில் 22 பெட்டிகளுடன் 12 இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளும், முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான 8 பொது வகுப்பு பெட்டிகளும், இரண்டு காவலர் பெட்டிகளும் இருக்கும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் புதிய ரயிலில் இடம் கிடைக்கும்.

ஒவ்வொரு முனையிலும் 6,000 HP WAP5  இன்ஜின்

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒவ்வொரு முனையிலும் ஒரு இன்ஜின் உள்ளது. சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த இந்த WAP5 இன்ஜின் 6,000 HP திறன் கொண்டது. இந்த ரயிலில் தோற்றத்தில் வந்தே பாரத் பாணியில் ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட என்ஜின்கள் உள்ளன.

அம்ரித் பாரத் புஷ்-புல் ரயில்

இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இன்ஜின்களும் சேர்ந்து ரயிலின் புஷ் புல் இயக்கத்தை செயல்படுத்துகின்றன. புஷ் புல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயிலை இயக்க்குவது குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ரயிலின் முன்புறம் உள்ள என்ஜின் ரயிலை இழுக்கும் போது பின்னால் உள்ள இயந்திரம் ரயிலை தள்ளுகிறது என்றால்.

குஷன் செய்யப்பட்ட லக்கேஜ் ரேக்குகள்

அம்ரித் பாரத் ரயில்கள்  (Indian Railways) குஷன் செய்யப்பட்ட லக்கேஜ் ரேக்குகளுடன் வருகின்றன. இருக்கைகள் அழகாகவும், நவீனமாகவும், மேம்படுத்தப்பட்ட வண்ணக் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று இந்திய ரயில்வே கூறுகிறது.

கழிவறைகள்

அம்ரித் பாரத் ரயில்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் FRP மாடுலர் கழிப்பறைகள் உள்ளன. அமிர்த பாரத் ரயில்கள் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டன. இந்த ரயில்களில், கழிவறைகள் வந்தே பாரத் ரயிலை போன்று இருக்கும்

மொபைல் சார்ஜிங் புள்ளிகள்

பயணிகளுக்கு ஒரு பெரிய வசதியாக, அம்ரித் பாரத் ரயில்களில் ஒவ்வொரு இருக்கைக்கும் அடுத்ததாக பொருத்தமான ஹோல்டருடன் மொபைல் சார்ஜர் உள்ளது. ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப உலோகத்திற்கு பதிலாக பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய பாட்டில் ஹோல்டரும் உள்ளது.

ஜெர்க் இல்லாத சவாரிகள்!

அம்ரித் பாரத் ரயில் ஜெர்க் இல்லாத சவாரிகளை வழங்குகிறது! அமிர்த பாரத் ரயில்களின் மற்றொரு முக்கிய அம்சம், வந்தே பாரத் ரயில்களைப் போன்ற  செமி-பர்மன் இணைப்புகள் ஆகும். இரண்டு கோச்சுகள் இணையும் இடத்தில் இந்த கூப்லர் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது ரயில் நிறுத்தம் மற்றும் இயக்கத்தின்போது இரு பெட்டிகள் வேகமாக மோதிக் கொள்வது அல்லது உராய்வதை ஸ்மூத்தாக மாற்றும்.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!

அம்ரித் பாரத் வேகம் மற்றும் வழித்தடங்கள்

அம்ரித் பாரத் ரயில்கள் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்க முடியும். புதிய ரயிலில் ரயிலின் இரு முனைகளிலும் என்ஜின்களுடன் புஷ் புல் ஆபரேஷனுக்காக எண்ட் சுவர்களில் கண்ட்ரோல் கப்ளர்கள் உள்ளன. அயோத்தி மற்றும் பெங்களூரு மற்றும் மால்டா டவுன் வழியாக டெல்லி மற்றும் தர்பங்கா இடையே முதல் இரண்டு அமிர்த பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குறைவான பயண நேரம்

அம்ரித் பாரத் ரயிலின் புஷ்-புல் செயல்பாட்டின் விளைவாக வளைவுகள், பாலங்கள் போன்றவற்றில் ரயில்கள் வேகக் கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டிய நிலையில், பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே அம்ரித் பாரத் ரயிலை இயக்கினால், வழக்கமான ரயிலை விட 2 மணி நேரம் மிச்சமாகும் என்று வைஷ்ணவ் கூறினார்.

 அம்ரித் பாரத் தயாரிப்பு திட்டம்

நடப்பு நிதியாண்டில், இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இதற்கான வரவேற்பை பொறுத்து, அடுத்த நிதியாண்டிற்கான உற்பத்தித் திட்டத்தை இந்திய ரயில்வே தயார் செய்யும். தொழில்நுட்பக் கருத்துக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 அமிர்த பாரத் பாணி ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். ரயிலில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அம்ரித் பாரத் ரயில் கட்டணம்

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம், அஞ்சல்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் கட்டணத்தை விட சுமார் 15-17% அதிகம். பயணிகளின் வசதிகள் மற்றும் வேகமான பயண அனுபவத்தை கருத்தில் கொண்டு கட்டணங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்தியோதயா மற்றும் மகாமனா ரயில்களுக்கு இணையான கட்டணங்கள் உள்ளன.

மேலும் படிக்க |  தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News