Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!

Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள்  மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 23, 2024, 10:43 AM IST
  • உடல்நலக் காப்பீடு தொடர்பாக ஐஆர்டிஏஐ வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு.
  • காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்.
  • புற்றுநோய்-எய்ட்ஸ் நோயாளிகளும் காப்பீடு பெற முடியும்.
Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..! title=

Health Insurance New Rules: இன்றைய காலகட்டத்தில், சிறிய அளவிலான சிகிச்சைகளுக்கு கூட அதிக அளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், மருத்துவ காப்பீடு என்பது இளையவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் முக்கியமாதாக இருக்கிறது. இந்நிலையில், மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள்  மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India - IRDAI) ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் பெற்றோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு உடல் நல காப்பீடு எடுக்க முடியுமா என்ற இனி கவலை வேண்டாம். அவர்களுக்காக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை நீங்கள் இனி தாராளமாக எடுக்கலாம்.  இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் IRDAI, உடல்நலக் காப்பீடு வாங்குவது தொடர்பான விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பாலிசியை வாங்கும் நபர்களுக்கு 65 வயது வரம்பை நீக்கியுள்ளது. முன்னதாக, வாடிக்கையாளர்கள் 65 வயது வரை மட்டுமே புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க முடியும்.

உடல்நலக் காப்பீடு தொடர்பாக ஐஆர்டிஏஐ  வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு

உடல்நலக் காப்பீட்டை வாங்குவதற்கான அதிகபட்ச வயதுக் கட்டுப்பாட்டை நீக்குவதன் மூலம், எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு எதிராக போதுமான பாதுகாப்பை உறுதிசெய்யும். மேலும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய சுகாதார சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள IRDAI, ஏப்ரல் 1, 2024 முதல் சுகாதார காப்பீட்டு பாலிசிகளுக்கு இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இப்போது எந்த வயதினரும் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் 

அதிகபட்ச வயது வரம்பை ரத்து செய்யும் அதே வேளையில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்களிடம்  உடல் நல காப்பீடு பெற விரும்பும் அனைத்து வயதினருக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிஸிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று IRDAI ஒரு சுற்றறிக்கையில் கூறியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ஏற்றவாறு காப்பீடு பாலிசிகளை கொண்டு வரவும், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை கருத்தில் கொண்டு, அவற்றிற்கு தீர்வு அளிக்கும் வகையில் பிரத்யேக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார காப்பீடு வழங்குநர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | PMJJBY: ரூ.436 ஆண்டு ப்ரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு... மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

புற்றுநோய்-எய்ட்ஸ் நோயாளிகளும் காப்பீடு பெற முடியும்

ஐஆர்டிஏஐ தனது சுற்றறிக்கையில், பல வகையான நோய்கள் மற்றும்  உடல்நிலையினால் பாதிக்கப்பட்ட  தனிநபர்களுக்கு ஏற்ப உடல்நலக் காப்பீட்டுகளை வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில், புற்றுநோய், இதயம், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி வழங்க இனி மறுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.  ஐஆர்டிஏஐ மருத்துவக் காப்பீட்டுக் காத்திருப்பு காலத்தை 48 மாதங்களுக்குப் பதிலாக 36 மாதங்களாகக் குறைத்துள்ளது.

அனைத்து வயதினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதார காப்பீடு

ஆயுஷ் சிகிச்சை பெறவும் வரம்பு இல்லை என்று காப்பீட்டு ஆணையத்தின் சுற்றறிக்கை கூறுகிறது. ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற அமைப்புகளின் கீழ் சிகிச்சைகளுக்கும் எந்த வயது வரம்பும் இல்லாமல் காப்பீட்டுத் தொகை வரை காப்பீடு செய்யப்படும். அனைத்து வயதினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் காப்பீட்டாளர்கள் சுகாதார காப்பீட்டுத் பாலிஸிகளை வழங்குவதை உறுதி செய்வார்கள் என்று IRDAI தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியால் குறிப்பிடப்பட்ட வேறு எந்த குழுவிற்கும் குறிப்பாக  பாலிஸிகளை வடிவமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News