ஒடிசா அரசு, மது பானங்கள் சில்லறை விற்பனை விலையின் முன்று இணைத்த 50% "சிறப்பு கோவிட் கட்டணத்தை(Special Covid Fee)" 15 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதுதொடர்பான ஒரு அறிக்கையில், மாநில கலால் துறை, முந்தைய 50 சதவீத விகிதத்திற்கு பதிலாக பீர் மற்றும் ஒயின் உள்ளிட்ட பல்வேறு மதுபானங்களின் சில்லறை விலைகளில் 15 சதவீதம் "சிறப்பு கோவிட் கட்டணம்" மட்டுமே வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
READ | ஒடிசாவின் காந்தமாலில் நடந்த போலீஸ் மோதலில் 4 மாவோயிஸ்டுகள் கொலை
கொரோனா ஊரடங்கு காலங்களில் விதிக்கப்பட்ட இந்த 'சிறப்பு கோவிட் கட்டணம்' ஒடிசா அரசுக்கு சுமார் 200 கோடி வருவாய் ஈட்டி கொடுத்தது.
"பிற மாநிலங்களில் மற்றும் குறிப்பாக அண்டை மாநிலங்களில் நிலவும் மதுபானத்தின் சில்லறை விலையினை கருத்தில் கொண்டு, விலை வேறுபாடு காரணமாக மாநிலத்திற்கு வெளியில் இருந்து அனுமதி இல்லாத மதுபானங்கள் ஒடிசாவிற்குள் நுழைவதில்லை என்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் விற்பனை செய்து வரும் இந்த மதுபானங்களின் சில்லறை விலையை திருத்த முடிவு செய்துள்ளது.
கலால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "சிறப்பு கோவிட் கட்டணம்" வசூலிக்கப்படும் விகிதத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
READ | முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய காதலன் கைது...
மேலும் இந்த அறிவிப்பில் குறிப்பிடுகையில்., சிறப்பு கோவிட் கட்டணம்-ல் ஒரு திருத்தம் செய்யப்படுகிறது, இது பல்வேறு MFU IMFU பீர் / ஒயின் / RTD பிராண்டுகளின் சில்லறை விலை, 2019-20-ஆம் ஆண்டின் தற்போதைய சில்லறை விலையை விட 15% வரம்பில் (தற்போது 50% உயர்வுக்கு பதிலாக) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை மாற்றம் 10.07.2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.