‘இந்த’ தொழில்களை ஆரம்பிக்க பணம் தேவையில்லை! ஆனால் கத்தை கத்தையாக சம்பாதிக்கலாம்..

Business Tips In Tamil : ஒரு சில சிறு தொழில்களை ஆரம்பிப்பதற்கு கையில் காசு தேவையில்லை. அப்படி, பணம் இல்லாமலேயே ஆரம்பிக்கக்கூடிய தொழில்கள் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2024, 04:11 PM IST
  • சிறு தொழில் ஐடியாக்கள்
  • இந்த தொழில்களை ஆரம்பிக்க பணம் தேவையில்லை
  • அவை என்னென்ன தொழில்கள்?
‘இந்த’ தொழில்களை ஆரம்பிக்க பணம் தேவையில்லை! ஆனால் கத்தை கத்தையாக சம்பாதிக்கலாம்.. title=

Business Tips In Tamil : இந்த உலகில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும், ஒரு பொதுவான ஒரு விஷயம் உள்ளது. அனைத்து நிறுவனங்களும், ஒரு சிறு தொழிலாகத்தான் ஆரம்பித்திருக்கும். அதுவும், அந்த தொழிலை ஆரம்பித்துள்ளவர், தன் கையில் இருக்கும் பணத்தை முதலீடாக செலுத்தி அத்தொழிலை ஆரம்பித்திருப்பார். ஒரு சில நேரங்களில், அந்த தொழிலை ஆரம்பிப்பவரின் முதலீடே அவரது திறனாகத்தான் இருக்கும். இதுவே அவர்களை தொழிலில் முன்னேற வைத்து பின்னர் ஒரு பெரிய நிறுவனத்திற்கு அவர்களை முதலாளி ஆக்கிவிடும். 

வேலைக்கு செல்பவர்கள் பலர், இப்போது தனது வேலையை தவிர்த்து பிற வேலைகளை செய்துகொண்டு எக்ஸ்ட்ராவாக சம்பாதித்து வருகின்றனர். இப்போது சிறுதொழில்களை ஆரம்பிக்க, பல ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அதிலும், ஆன்லைனில் ஆரம்பிக்கும் தொழில்கள் அதிகமாகவே உள்ளன. அப்படி, நீங்கள் பெரிய முதலீடு இல்லாமல் ஆரம்பிக்க கூடிய ஆன்லைன் தொழில்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

Blog எழுத்தாளர்:

எழுத்து வடிவில் செய்திகளை தெரிவிக்க, பல்வேறு தளங்கள் இருந்தாலும், அதை ப்ளாக் வடிவில் படிப்பதற்கான வாசகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். செய்திகள் மட்டுமல்ல, பல்வேறு துறை சார்ந்த விஷயங்களை நாம் ப்ளாக் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  இதில், WordPress தளம், முன்னணியில் இருக்கிறது. இந்த தளத்தில் நம் நிதி நிலைக்கு ஏற்றவாறு ஆப்ஷனை வைத்துக்கொண்டால், நாம் பதிவிடும் விஷயங்களுக்காக பணம் சம்பாதிக்கலாம். 

SEO செர்வீஸ்:

அனைத்து துறை வேலைகளிலும் தேவைப்படும் Search Engine Optimization சேவை தேவைப்படும். ஆன்லைனில் மார்கெட்டிங் செய்பவர்களுக்கு நீங்கள் இந்த சேவையை ஃப்ரீலான்சிங் முறையில் செய்து தரலாம். ப்ளாகர், அல்லது காபி ரைட்டராக நீங்கள் இந்த சேவையை செய்யலாம். இதற்காக சில ஆன்லைன் கோர்ஸ்களும் உள்ளன. இதை சரிவர கற்றுக்கொண்டால், நீங்களும் நன்றாக சம்பாதிக்கலாம். 

வெப் டிசைனிங்:

அனைத்து நிறுவனங்களுக்கும், அவர்களின் இணையதளத்தை வடிவமைத்து தர, ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. தொழில் நிறுவனங்களில் இருந்து, செய்தி நிறுவனங்கள் வரை, அனைத்திற்கும் வெப் டிசைனிங் தேவையாக இருக்கின்றன. இதை செய்து தருவதற்கென்றே சில சிறு தொழில் நிறுவனங்கள் இணைகின்றன. அப்படி, நீங்களும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தால் கண்டிப்பாக லாபம் பார்க்கலாம். 

மேலும் படிக்க | யூடியூபில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

யூடியூபர்:

முழுக்க முழுக்க, தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து யூடியூபில் கணக்கு தொடங்குபவர்கள், ஒரு கட்டத்தில் பல ஆயிரம் பேர் சப்ஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு லட்ச லட்சமாக சம்பாதிக்கின்றனர். இதில் வரும் விளம்பரங்கள், பிராண்டிக்கிற்கு என்று தனித்தனியே கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.

பாட்காஸ்ட்:

தற்போதைய காலக்கட்டத்தில், செலிபிரிட்டிகளில் இருந்து சாதாரணமானவர்கள் வரை, பலர் பாட்காஸ்ட் (Podcaast) ஆரம்பிக்கின்றனர். இதில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளுக்கு சரியான ஆடியன்ஸ் கிடத்துவிட்டால், நீங்களும் பிரபலமாகலாம், நீங்கள் செய்யும் வேலைக்கும் கை மேல் பலன் கிடைக்கும். 

ஆன்லைன் டியூட்டர்:

நீங்கள், எதிலாவது கை தேர்ந்தவராக இருந்தால் அதற்காக ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஃபிட்னஸ் கோச் என்றால், அதற்காக உங்களை தேடி வருபவர்களுக்கு ஒரு கட்டணத்துடன் க்ளாஸ் எடுக்கலாம். உங்கள் மார்கெட்டை சமூக வலைதளம் மூலம் விரிவாக்கி கொள்ளலாம்.

மேலும் படிக்க | அலர்ட்! மார்ச் 31க்குள் இந்த வேலைகளை முடிச்சுருங்க, இல்லையென்றால் சிக்கல் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News