பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. வரும் நாட்களில், அவர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலனைப் பெறக்கூடும். மோடி அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்கு முன் இதை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எந்தத் துறையில் செயல்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. எனினும், அமைச்சகத்திடம் இருந்து இதுவரை உறுதியான பதில் எதுவும் வரவில்லை. அதே நேரத்தில், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வந்த செய்திகளை இணை அமைச்சர் பகவத் கரத் மறுத்திருந்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை எப்போது அமல்படுத்தலாம்?
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசு இன்னும் உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் அனுகூலத்துக்கு பயன்படுத்தி வருவதால், இது குறித்து உறுதியான அறிவிப்பு விரைவில் வரக்கூடும். டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) வழங்க மத்திய அரசு பரிசீலிக்கக் காரணம் இதுதான். 'பழைய ஓய்வூதியப் பிரச்சினை மிகப் பெரியது. இது குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. அமைச்சகத்தின் பதிலுக்கு பிறகே இது குறித்து முடிவு எடுக்க முடியும்.' என்று வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறையின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
எந்த ஊழியர்கள் இதன் வரம்பின் கீழ் வருவார்கள்?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின், மத்திய அரசு, இந்த வழக்கை சட்ட அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது. நிதிச் சேவைகள் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன் (DoP&PW) துறையானது, ஜனவரி 01, 2004 அன்று அல்லது அதற்கு முன் யாருடைய ஆட்சேர்ப்புக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதோ, அந்த ஊழியர்களை NPS இன் வரம்பிலிருந்து விலக்குவது குறித்து சரியான முடிவை எடுக்கலாம். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் வரக்கூடும். பிரச்சினை தீர்க்கப்பட்டால், ஓய்வூதியம் பெறுவோர் பெரிய பலனைப் பெறக்கூடும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் 3 பெரிய நன்மைகள்
1- பழைய ஓய்வூதியத் திட்டத்தில், கடைசியாக வாங்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும்.
2- பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணவீக்க விகிதம் அதிகரித்தால், அகவிலைப்படியும் அதிகரிக்கும்.
3- புதிய ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தும் போது, அது ஓய்வூதியத்தையும் அதிகரிக்கிறது.
2004ல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது
மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இதன் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நிதிக்கு தனி கணக்குகள் திறக்கப்பட்டு, நிதி முதலீட்டிற்காக நிதி மேலாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஓய்வூதிய நிதியின் முதலீட்டின் வருமானம் நன்றாக இருந்தால்,வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியத்தின் பழைய திட்டத்தை ஒப்பிடும்போது, புதிய ஊழியர்களும் எதிர்காலத்தில் பணி ஓய்வின் போது நல்ல தொகையைப் பெறலாம். ஆனால், ஓய்வூதிய நிதியின் முதலீடு சிறப்பாக வரும் என்பது நிச்சயம் அல்ல என ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே 7வது ஊதியக்குழுவின் கீழ் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழையதை விட குறைவான பலன்கள்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் ஒரே மேடையில் ஒன்றிணையத் தொடங்கியுள்ளனர். பல்வேறு துறைகளின் ஊழியர் அமைப்புகளும் புதிய உத்திகளை தயாரித்துள்ளன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை நியமித்தது. இந்த திட்டத்தில், பழைய திட்டத்தை விட ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சலுகைகள் கிடைக்கும். இது அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்காது. மேலும் ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் பணத்திற்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாஸ் நியூஸ்; புதிய விதிமுறை அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ