இன்று நாட்டில், ஆதார் அட்டை உங்கள் அடையாளத்தின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. நிதி நடவடிக்கைகள் முதல் அரசாங்க திட்டங்கள் வரை பலன்களைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது. தற்போது இந்த ஆதார் அட்டை தொடர்பான ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆதார் அட்டையை உருவாக்கும் செயல்பாட்டில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. UIDAI சமூக ஊடக தளமான X-ல் இது பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளது.
IRIS ஸ்கேன் மூலம் பதிவு செய்யலாம்
ஆதார் உருவாக்குவதற்கான விதிகளை அரசு மாற்றியுள்ளது. இதன் கீழ், ஆதார் அட்டையை (Aadhaar Card) உருவாக்கத் தகுதியான நபரின் கைரேகைகள் கிடைக்காத பட்சத்தில் IRIS ஸ்கேன் மூலம் இப்போது பதிவு செய்யலாம். இந்த மாற்றத்தின் மூலம், ஆதார் அட்டையை செய்யும் செயல்முறையை அரசாங்கம் மிகவும் எளிதாக்கியுள்ளது. மாற்றுத் திறனாளிகள், அதாவது கை, விரல்கள் இல்லாதவர்கள் ஆதார் அட்டை பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. புதிய விதியின்படி, கைரேகை இல்லாத பட்சத்தில், கண் ஸ்கேன் மூலமும் ஆதார் பதிவு செய்யலாம்.
ஆதார் விதிகள் ஏன் மாற்றப்பட்டன?
கைரேகை இல்லாததால் ஆதார் எண்ணைப் பெற முடியாமல் கேரளாவில் உள்ள ஜோசிமோல் பி ஜோஸ் என்ற பெண், பிரச்சனைகளை சந்தித்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலையிட்ட பிறகு ஆதார் அட்டை விதிகளில் இந்த மாற்றங்கள் வந்துள்ளன. தற்போது ஆதார் எண்ணுக்கு கைரேகை தேவை என்பது முடிவுக்கு வந்துள்ளதால், இந்த மாற்றம் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். ஆதாருக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் கைரேகைகள் மூலம் பதிவு செய்ய முடியாதவர்கள், கண் ஸ்கேன் மூலம் பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்: பழைய ஓய்வூதியம் பாரத்தை அதிகரிக்கும்... எச்சரித்த RBI
சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பகிந்த UIDAI
விதி மாற்றம் சம்பந்தமாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI தனது X கணக்கில் தகவல் பகிர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளதைக் குறிப்பிட்டு, 'அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும், கைவிரல், ரேகை இல்லாத நபர்கள் அல்லது வேறு ஏதேனும் குறைபாடு உள்ளவர்களின் பிற பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி ஆதார் வழங்க வேண்டும் என்று புதிய நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
#UIDAI sensitizes enrolment agencies to assist such persons in enrolling for Aadhaar.
“Standard advisory issued to all Aadhaar Service Kendras to issue Aadhaar to those having blurred finger…
— Aadhaar (@UIDAI) December 10, 2023
கைரேகை-கருவிழி பதிவு இரண்டையும் கொடுக்க முடியாத நபருக்கான விதிகள்
UIDAI இன் கூற்றுப்படி, கைரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக்ஸ் இரண்டையும் வழங்க முடியாத தகுதியுள்ள நபர்களும் ஆதார் அட்டை பெற பதிவு செய்யலாம். அத்தகைய நபரின் பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி மற்றும் ஆண்டு ஆகியவை பயோமெட்ரிக்ஸ் மூலம் கைப்பற்றப்படுகின்றன. மேலும், ரேகைகள் அல்லது கருவிழி அல்லது இரண்டும் பொருந்தாத பட்சத்தில், புகைப்படம் எடுக்கப்பட்டு, ஆதார் பதிவு மையத்தின் மேற்பார்வையாளர், விதிவிலக்கான பிரிவில் அத்தகைய பதிவைச் சரிபார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ