பர்சனல் லோன் கிடைக்கவில்லையா? இந்த முறைகளை பாலோ பண்ணுங்க!

Apply for Personal Loan: சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 750 புள்ளிகளுக்குக் குறையாமல் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் கடன் வழங்குவார்.    

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2023, 12:12 PM IST
  • தனிநபர் கடன் பெற வேண்டுமென்றால் கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
  • உங்களது க்ரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் கடன் எளிதாக கிடைக்கும்.
  • இணை விண்ணப்பதாரரின் கிரெடிட் நிலையை பொறுத்தும் கடன் வழங்கப்படும்.
பர்சனல் லோன் கிடைக்கவில்லையா? இந்த முறைகளை பாலோ பண்ணுங்க! title=

தனிநபர் கடன்கள் உயர்கல்வி, பயணம், திருமணங்கள் அல்லது மருத்துவ அவசரநிலைகள் போன்ற திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத செலவுகள் போன்றவற்றை சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.  இந்தியர்கள் பலரும் எதிர்பாராத செலவினங்களுக்காக தனிநபர் கடனைப் பெறுகின்றனர், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் பெறக்கூடிய பாதுகாப்பற்ற கடன்கள் என்பதால் பலரும் தனிநபர் கடன்களை பெறுவதில் விருப்பம் தெரிவிக்கின்றனர்.  தனிநபர் கடன் பெறுவது அவ்வளவு எளிதல்ல, நீங்கள் சில தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  தனிநபர் கடன் பெற வேண்டுமானால் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.  உங்களின் சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 750 புள்ளிகளுக்குக் குறையாமல் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் கடன் வழங்குவார்.  

மேலும் படிக்க | உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி, இந்நாளில் வட்டி பணம் கிடைக்கும்
 
பல என்பிஎஃப்சிகள் உங்கள் கடன் தொகையை தீர்மானிக்க ஆன்லைன் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை வழங்குகின்றது.  ஒருவர் பல்வேறு நிறுவனங்களில் பல கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  ஒவ்வொரு கடன் விண்ணப்பமும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் நிலையை பொறுத்து அங்கீகரிக்கப்படும்.  உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும் ஒவ்வொரு கடன் விண்ணப்பங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 6 மாதங்கள் இடைவெளி இருப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை அவர்களின் வருமான விவரங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பார்த்து மதிப்பிடுகின்றனர்.  எனவே உங்கள் மாதாந்திர நிலையான வருமானத்துடன் சேர்த்து உங்களின் அனைத்து வருமான ஆதாரங்களையும் சமர்ப்பிப்பது நல்லது. 

தனி நபர் கடனில் கூட்டு வருமானம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதால், நல்ல நிலையில் வருமானம் பெறும் உங்கள் இணை விண்ணப்பதாரரைக் கொண்டிருப்பது நல்லது, இது உங்கள் தனிநபர் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.  நல்ல கிரெடிட் ஸ்கோருடன் இணை விண்ணப்பதாரர் இருப்பது உங்கள் கடன் தகுதியை வலுப்படுத்தவும், நியாயமான வட்டி விகிதத்தில் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.  கடன்-வருமானம் (டிடிஐ) விகிதம் உங்கள் மாதாந்திரக் கடனை மொத்த மாத வருமானத்தால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.  கடனுக்கான வருமான விகிதம் உங்கள் மாத வருமானத்தில் 40% ஐ விட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ரயிலில் உணவு ஆர்டர் செய்வர்களுக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News