170 பயணிகளுடன் பாகிஸ்தானின் PIA விமானம் கோலாலம்பூரில் பறிமுதல்

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமான நிறுவனம் சிக்கலை எதிர்கொள்கிறது.  

Written by - ZEE Bureau | Last Updated : Jan 24, 2021, 07:51 PM IST
  • 170 பயணிகளுடன் பாகிஸ்தான் விமானம் பறிமுதல்
  • பி.ஐ.ஏ விமானம் மலேசியாவில் பறிமுதல்
  • விமானம் கடனுக்காக பறிமுதல் செய்யப்பட்டது
170 பயணிகளுடன் பாகிஸ்தானின் PIA விமானம் கோலாலம்பூரில் பறிமுதல்

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமான நிறுவனம் சிக்கலை எதிர்கொள்கிறது.  

பொருளாதார பிரச்சனையால், கோலாலம்பூர் விமான நிலையத்தில் PIA-வின் விமானம் பறிமுதல் செய்யப்பட்டது, அப்போது விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர்.

விமான குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தாத பிஐஏ (PIA) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் (Court) தீர்ப்பளித்தது. அதையடுத்து மலேசிய அதிகாரிகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிஐஏவின் போயிங் -777 விமானத்தை கையகப்படுத்தினர்.

Also Read | அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?   

பி.ஐ.ஏன் விமான நிறுவனம் டப்ளினில் (Dublin) உள்ள ஏர்கேப் (AerCap) நிறுவனத்திற்கு பணம் தரவேண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  

பாகிஸ்தான் நிறுவனம், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, பெரேக்ரின் ஏவியேஷன் சார்லி லிமிடெட் நிறுவனத்திற்கு (Peregrine Aviation Charlie Limited) கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"உரிமைகோருபவரின் நிலைப்பாடு என்னவென்றால், அந்த தொகை இன்று பிரதிவாதியால் (பிஐஏ) செலுத்தப்பட்டது," என்று ஏர்கேப்பின் வழக்கறிஞர் இந்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Also Read | குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா?  

பிஐஏ கொடுக்கவேண்டிய தவணைத் தொகைகள் ஜூலை முதல் நிலுவையில் உள்ளன. உள்ளூர் அறிக்கையின்படி, பிஐஏ விமான நிறுவனம், மாதம் $580,000 தொகையை குத்தகைக்காக கொடுக்கவேண்டும்.  ஆனால் பி.ஐ.ஏ அந்தத் தொகையை செலுத்த வேண்டும்.

இறுதியில் குத்தகை நிறுவனம், பாகிஸ்தான் (Pakistan) விமான நிறுவனங்கள் மீது லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. 2020 அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. ஆறு மாதங்களாக கிட்டத்தட்ட $14 மில்லியன் தொகை குத்தகைக் கட்டணத்தை செலுத்தாத பி.ஐ.ஏ தற்போது சிக்கலில் சிக்கியிருக்கிறது.

பணம் செலுத்தாதது குறித்து பிஐஏவுக்கு அறிவிக்கப்பட்டபோது, உலகளவில் கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, விமான போக்குவரத்து தடைபட்டிருப்பதால் விமான நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். தொற்றுநோயை காரணம்  காட்டினாலும், குத்தகை நிறுவனம் வழக்கு தொடுத்தது. பி.ஐ.ஏவின் இயக்கத்தை கண்காணித்து, சர்வதேச சிவில் விமான குத்தகை சட்டங்களின்படி விமானத்தை கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்க லண்டன் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.

விமானம் மலேசியாவில் தரையிறங்கியபோது, விமானத்தில் இருந்த பயணிகளுடன் அதிகாரிகள் விமானத்தை கைப்பற்றியதால் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.  

Also Read | தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன? சத்குரு விளக்கம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News