அலர்ட்...! இந்த வகை முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் பயனளிக்காது

பொது வருங்கால வைப்பு நிதி மூலம் முதலீட்டாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். இருப்பினும், அதில் முதலீடு செய்வதற்கு முன், அவர்கள் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : May 16, 2023, 02:54 PM IST
  • இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும்.
  • இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய இயலும்.
  • திட்டத்தின் இடையே பணத்தை உங்களால் எடுக்கவே முடியாது.
அலர்ட்...! இந்த வகை முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் பயனளிக்காது title=

PPF Scheme: மக்கள் நலனுக்காக பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன, இதனால் மக்கள் சிறந்த சேமிப்பை பெறுவது மட்டுமின்றி, சிறந்த வருமானத்தையும் பெற முடியும். இந்த திட்டங்கள் மூலம், மக்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்க அரசு முயற்சிக்கிறது. அதே நேரத்தில், இந்த திட்டங்கள் வெவ்வேறு வகுப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 

பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் (PPF) இவற்றில் ஒன்றாகும். பொது வருங்கால வைப்பு நிதி மூலம் முதலீட்டாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். இருப்பினும், அதில் முதலீடு செய்வதற்கு முன், அவர்கள் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

PPF திட்டம்

குறிப்பாக, சிலர் தங்கள் முதலீட்டில் இருந்து விரைவாக பலன் பெற வேண்டும் மற்றும் விரைவாக வருமானத்தைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் முதலீடுகளில் எந்த லாக்-இன் காலத்தையும் விரும்பவில்லை, மேலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் முதலீடுகளைப் பயன்படுத்தலாம் என்பதையே அவர்கள் விரும்புகின்றனர். இருப்பினும், PPF திட்டத்தில் அந்த வசதி இல்லை. நீண்ட காலத்திற்கு PPF திட்டத்தில் பணம் முதலீடு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்

இத்திட்டம் இவர்களுக்கு பயன்படாது

PPF திட்டத்தில் ஏதேனும் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது 15 ஆண்டுகளுக்கு பின்னர் தான் எடுக்க முடியும். குறிப்பாக, PPF திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். PPF கணக்கில் பெறப்பட்ட வட்டி 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழுத் தொகையுடன் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், குறுகிய கால முதலீட்டு விருப்பத்தைத் தேடுபவர்களுக்கு, இது பயனுள்ள திட்டமாக இருக்காது.

முதலீடு

அத்தகைய சூழ்நிலையில், தங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க விரும்பாதவர்களுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதே சமயம், ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டத்தில் அது சாத்தியமில்லை.

PPF முதலீட்டாளர்கள் கவனத்திற்கு...

சேமிப்புத் திட்டங்களின் முதலீடு செய்பவர்களை ஆன்லைன் மோசடி உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், முதலீட்டாளர்களின் நிதியைக் கண்காணிக்கும் வகையிலும் சேமிப்புத் திட்டங்களின் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு சமீபத்தில் கட்டாயமாக்கி உள்ளது.

இது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். அத்தகைய சூழ்நிலையில், PPF முதலீட்டாளர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்களின் கணக்கு முடக்கப்படலாம் என்றும் கணக்கின் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

ஆதாருடன் PPF கணக்கை இணைக்காவிட்டால், திட்டத்தில் செலுத்த வேண்டிய வட்டித் தொகை PPF கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் வரவு வைக்கப்படாது. மேலும், முதலீட்டாளர் தனது PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி முதிர்வுத் தொகை முதலீட்டாளரால் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படாது.

மேலும் படிக்க | RuPay கார்டில் பணம் செலுத்த இனி CVV தேவையில்லை... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News