PPF vs SSA, Investment Tips: அஞ்சல் துறை மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகிய இரண்டும் அரசின் மிகவும் பிரபலமான இடமாகும். இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்தால் நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். எனவே, இதை மத்திய தர குடும்பத்தினர் அதிகம் பயன்படுத்துவார்கள்.
இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு மற்றும் முதலீடு காலம் ஒன்றாக ஒன்றாக இருந்தாலும், இன்னும் சில ஒற்றுமைகளும் இவற்றில் உள்ளன. PPF திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயது குறைவான சிறுமியின் பெயரில் கணக்கை தொடங்கி அதில் முதலீடு செய்து PPF திட்டத்தைவிட இதில் ரிட்டன்ஸை பெறலாம்.
SSA vs PPF: முதலீடு ஒன்றுதான்...
இரண்டு திட்டங்களையும் நீங்கள் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையத்தின் மூலம் திறந்துகொள்ளலாம். தொடர்ந்து இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். அதுமட்டுமின்றி இதன் பலன்களை பெற நீங்கள் ஓய்வு காலம் வரை காத்திருக்கவும் தேவையில்லை. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் போதும். இந்த இரண்டு திட்டங்களும் நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். அதேபோல், இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரு கணக்கில் ஒரு வருடத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்யலாம். அதாவது வருடாவருடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீங்கள் முதலீடு செய்தால் இரண்டிலும் மொத்தமாக 15 ஆண்டுகளில் 22 லட்சத்து 50 ஆயிரத்தை ரூபாயை சேர்த்திருப்பீர்கள்.
வட்டி விகிதங்கள் எவ்வளவு?
இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் எவ்வித அச்சமும் இன்றி முதலீடு செய்யலாம். இந்திய அரசு இதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நிலையான வருவாய் தரும் இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகித்ததில் மாற்றம் செய்யம். தற்சமயம், PPF கணக்கிற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.1 ஆக உள்ளது, SSA கணக்கிற்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 8.2 ஆக உள்ளது.
இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்வதால் வருமான வரியில் இருந்தும் விலக்கு கிடைக்கும். அதாவது, இதில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வருடாவருடம் வரும் வட்டி வருவாய்க்கு வரி செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு திட்டங்களும் முதிர்ச்சி பெற்ற பின்னர் நீங்கள் முழு தொகையையும் பெறும்போது வரி செலுத்த வேண்டாம். இரண்டு திட்டங்களும் EEE பிரிவு திட்டங்களில் வரும்.
PPF vs SSA: வேறுபாடு என்ன?
இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அதாவது, PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்துவிடும். முதிர்ச்சி அடைந்த உடன் நீங்கள் அந்த பணத்தை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், SSA திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தாலும் நீங்கள் அந்த தொகையை பெற 6 ஆண்டுகள் மேலும் காத்திருக்க வேண்டும். அதாவது, 21 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அந்த தொகையை நீங்கள் பெற முடியும்.
மேலும் படிக்க | கார் கடனுக்கும் உங்களால் வரி விலக்கு பெற முடியும்! இதை மட்டும் செய்தால் போதும்!
ஆனால், நீங்கள் 6 ஆண்டுகள் மேலும் காத்திருந்தாலும் பலன் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். 15 ஆண்டுகள் முதலீடு செய்து அடுத்த ஆறு ஆண்டுகள் காத்திருந்து அந்த முதிர்ச்சி தொகையை பெறும்போது கூட்டுவட்டியால் வருவாய் இரட்டிப்பாகும். எனவே, PPF திட்டத்தை விட SSA திட்டத்தில் அதிக வருவாயை பெறலாம். இரண்டிலும் நீங்கள் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைதான் முதலீடு செய்திருப்பீர்கள்.
எதில் அதிக வருவாய்?
ஆனால், PPF திட்டத்தில் 7.1 வட்டி விகிதத்தின் மூலம் 40 லட்சத்து 68 ஆயிரத்து 290 ரூபாய் மொத்தமாக கிடைக்கும். அதுவே, SSA மூலம் 21 ஆண்டுகளில் 8.2 வட்டி விகிதத்தின் மூலம் 49 லட்சத்து 32 ஆயிரத்து 119 ரூபாய் கிடைக்கும். எனவே, உங்கள் மகளுக்கு நீங்கள் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என நினைத்தால் உடனே இதுகுறித்து முடிவெடுங்கள்.
மேலும் படிக்க | SIP + SWP: ஓய்வு காலத்தில் கவலையில்லா வாழ்க்கை... 30 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.1,52,000 வரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ