Free Ration Update: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் விநியோகம் தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் விநியோகம் தொடர்பாக தற்போது மிகப்பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் டிப்போ ஹோல்டர்களின் புகார்களுக்கு அரசு தீர்வு தந்துள்ளது. அந்தவகையில் ரேஷன் டிப்போ ஹோல்டர்கள் இனி ரேஷன் விநியோகத்தை குறைக்க முடியாது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து கார்டுதாரர்களும் முழுமையான ரேஷன் தொகையை செலுத்த வேண்டும். உண்மையில், ரேஷன் கடைக்காரர்கள் எவ்வித குளறுபடியும் செய்யாமல் இருக்க எடை இயந்திரத்தை இ-போஷ் இயந்திரத்துடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக உத்தரப்பிரதேச மாவட்டத்தில் இருக்கும் 1200க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இ-போஷ் இயந்திரங்கள் மற்றும் எடை இயந்திரங்கள் இணைக்கும் பணி நிறைவடையும்.
ரேஷன் கடைக்காரர்களின் மிகப்பெரிய புகரால் என்னவென்றால் சப்ளை துறைக்கு குறைவான ரேஷன் தான் கிடைக்கிறது. இந்த புகார் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. கொரோனா காலம் முதல் இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த இலவச ரேஷன் விநியோகத்தில் பற்றாக்குறை புகார்கள் அதிகரித்தபோது, அரசு முதல் முறையாக இ-போஷ் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. இதன் பலனாக போலி ரேஷன் கார்டுகள் ஒரேடியாக ஒழிக்கப்பட்டது. அதன்படி இந்த இயந்திரத்தின் மூலம் கட்டை விரலை வைத்தால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இதனிடையே தட்டுப்பாடு புகார்கள் இன்னும் குறையாததால் தற்போது ரேஷன் இயந்திக்களில் ரேஷன் எடை தராசை இ-போஷ் இயந்திரத்துடன் இணைக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இது தோபர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர் சஞ்சீவ் குமார் சிங் கூறியதாவது., உத்தரப்பிரதேச மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் விநியோகஸ்தர்களில் எடை இயந்திரங்கள் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் KYC:
இதற்கிடையில் ரேஷன் கார்டு பயனாளிகளின் கேஒய்சி (KYC) நடத்தும் பொறுப்பு தற்போது ரேஷன் விநியோகஸ்தர்களிடம் மழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹர்தோய் மாவட்ட வழங்கல் அலுவலர் கமல் நயன் சிங்., மாவட்டத்தில் மொத்தம் ஏழு லட்சத்து 70 ஆயிரத்து 993 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. இதில், 31 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்கள் மொத்தம் உள்ளன. ரேஷன் கார்டில் பதிவு செய்துள்ள நபர்கள் அனைவரும் இ-லூப் இயந்திரத்தில் கட்டை விரலை வைத்து ரேஷன் பொருட்களை பெறலாம். பல சந்தர்ப்பங்களில், குடும்ப உறுப்பினர் இறந்த பிறகு, அவரது பிரிவில் இருந்து ரேஷன் எடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் இது குறித்து துறைக்கு தகவல் தெரிவித்தும் கார்டில் இருந்து யூனிட் கழிக்கப்படுவதில்லை, எனவே ஒவ்வொரு யூனிட்டின் EKYC சரிபார்ப்பைப் பெறுவதற்கு அரசு மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் ரேஷன் கடைக்குச் சென்று இயந்திரத்தில் தங்களின் கட்டைவிரல் பதிவை வைக்க வேண்டும். இது தொடர்பாக கார்டுதாரர்களுக்கு ரேஷன் விநியோகஸ்தர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ